ஹிஸ்புல்லா அமைப்பு: ராய்ட்டர்ஸ், டெல் அவிவ். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரின் 17வது நாளாக இன்றும் காசாவில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை தொடர்கிறது. இன்று (திங்கள்கிழமை) காலை காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இது தவிர, தெற்கு லெபனானில் உள்ள சில இலக்குகளை குறி வைத்து இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் வடக்கில் அமைந்துள்ள லெபனானில் ஹிஸ்புல்லா அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சக்தியாக இருந்து வருகிறது.
ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேலை நோக்கி டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவ திட்டமிட்டிருந்த லெபனானில் உள்ள இரண்டு ஹிஸ்புல்லா செல்களை இஸ்ரேலிய விமானம் தாக்கியதாக அதன் ராணுவம் தெரிவித்துள்ளது. ஒரு வளாகம் மற்றும் ஒரு கண்காணிப்பு நிலையம் உட்பட பிற ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேலின் இராணுவம் கூறியது. அதே நேரத்தில், இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையில் தனது போராளிகளில் ஒருவர் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
ஹமாஸ் உடன் போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலுடன் போரை தொடங்க ஹிஸ்புல்லா அமைப்பு திட்டமிட்டுள்ளது. இது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஹிஸ்புல்லா அமைப்பு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பேரழிவை சந்தீப்பார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பு என்றால் என்ன?
ஹிஸ்புல்லா "கடவுளின் கட்சி" என்று அழைக்கப்படுகிறது. ஹிஸ்புல்லா என்பது லெபனானை தளமாகக் கொண்ட ஒரு ஷியைட் முஸ்லிம் அரசியல் கட்சி மற்றும் போராளிக் குழு ஆகும், ஹிஸ்புல்லா போராளிக் குழு ஹமாஸின் கூட்டாளியாகும். லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக 1982 இல் ஈரானின் புரட்சிகர குழுவால் இது அமைக்கப்பட்டது. இது இஸ்ரேலை எதிர்ப்பதில் உறுதியாக இருந்து வருகிறது. இஸ்ரேல் எல்லையில் இது குழு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பு எப்பொழுது உருவானது?
1979 இல் ஆட்சிக்கு வந்த ஈரானில் உள்ள தேவராஜ்ய அரசாங்கத்தால் செல்வாக்கு பெற்ற ஷியைட்டுகளின் குழு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆயுதம் ஏந்தியது. அரபு நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக ஈரானும் அதன் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையும் (IRGC), அப்பொழுது வளர்ந்து வந்த போராளிகளுக்கு நிதி மற்றும் பயிற்சி அளித்தன. அத குழுவுக்கு தான் "கடவுளின் கட்சி" என்று பொருள்படும் ஹிஸ்புல்லா என்ற பெயர் வைக்கப்பட்டது.
ஹிஸ்புல்லா அமைப்புக்கு எப்படி நிதியுதவி கிடைக்கிறது?
ஹிஸ்புல்லா அமைப்புக்கு பெரும்பாலான பயிற்சிகள், ஆயுதங்கள் மற்றும் நிதியுதவிகளை ஈரான் வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் குழுவிற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை அனுப்புகிறது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிரியாவில் உள்ள பஷர் அல்-அசாத் ஆட்சி மூலம் நிதி ஆதரவு கிடைக்கிறது. அத்துடன் வணிகங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் லெபனான் புலம்பெயர்ந்தோரிடமிருந்து நிதியுதவி பெறுகிறது.
லெபனான் அரசியலில் ஹிஸ்புல்லா அமைப்பின் பங்கு என்ன?
1992 ஆம் ஆண்டு முதல் லெபனான் அரசாங்கத்தில் ஹிஸ்புல்லா அமைப்பு அங்கம் வகிக்கிறது. அதன் உறுப்பினர்கள் எட்டு பேர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் கட்சி 2005 ஆம் ஆண்டு முதல் அமைச்சரவைப் பதவிகளை வகித்து வருகிறது. 2022 இல் நடந்த தேர்தல்களில் 128 உறுப்பினர்களைக் கொண்ட லெபனான் பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாவுக்கு 13 இடங்களை தக்க வைத்துக் கொண்டது. இருப்பினும் கட்சியும் அதன் கூட்டாளிகளும் பெரும்பான்மையை இழந்தனர்.
லெபனானில் ஹிஸ்புல்லா சக்தி வாய்ந்த அமைப்பு
ஹிஸ்புல்லா மற்றும் அரசியல் கட்சி கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் லெபனான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தனர், ஆனால் ஹிஸ்புல்லாவின் ஒரு குழு வலிமையான அரசியல் சக்தியாக இருந்து வருகிறது. மேலும் தெற்கு லெபனான் உட்பட நாட்டின் சில பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
சக்தி வாய்ந்த ராக்கெட்டு, ஏவுகணை வைத்திருக்கும் ஹிஸ்புல்லா
2006 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பு ஒரு முடிவிலா போரை நடத்தியது. அதன்பிறகு, தற்போதியாய நிலவரப்படி, ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை என சுமார் ஒன்றரை லட்சம் அளவுக்கு வைத்திருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது. ஹிஸ்புல்லாவிடம் "பெரும்பாலான நாடுகள் வைத்திருக்கும் பீரங்கிகளின் பெரிய ஆயுதக் களஞ்சியம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர் தொடங்கினால், விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.
ஹிஸ்புல்லாவை பயங்கரவாத அமைப்பாக கருதும் அமெரிக்கா
1983 அக்டோபரில் பெய்ரூட்டில் உள்ள அதன் மரைன் தலைமையகத்தை அழித்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 241 படைவீரர்களைக் கொன்றதற்கும், 1983 இல் அமெரிக்கத் தூதரகம் மற்றும் 1984 இல் அதனுடன் இணைக்கப்பட்ட இரண்டு தற்கொலைக் தாக்குதல்களுக்கும் ஹிஸ்பொல்லா பொறுப்பேற்றுக் கொண்டது.
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே மோதலுக்கு காரணம் என்ன?
1978 இல் தெற்கு லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமித்ததில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு முக்கிய எதிரியாக இஸ்ரேல் உள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு வெளிநாடுகளில் உள்ள யூதர்கள் மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான தாக்குதல்கள் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு ள்ளது. 1994 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் உள்ள யூத சமூக மையத்தின் மீது கார் குண்டுவெடிப்பு, எண்பத்தைந்து பேரைக் கொன்றது. லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் மீது குண்டுவெடிப்பு. 2000 ஆம் ஆண்டில் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக வெளியேறிய பிறகும், அது ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக சர்ச்சைக்குரிய ஷெபா ஃபார்ம்ஸ் எல்லை மண்டலத்தில். ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே அவ்வப்போது ஏற்பட்ட மோதல் 2006ல் ஒரு மாத காலப் போராக விரிவடைந்தது. இந்த மோதலில் ஹிஸ்புல்லா ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை இஸ்ரேலிய எல்லைக்குள் வீசியது. ஆனால் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் இன்னும் முழு வீச்சில் போரில் ஈடுபடவில்லை.
வலுவான இராணுவ சக்தியாக ஹிஸ்புல்லா மாறியது எப்படி?
2013 இல் சிரிய உள்நாட்டுப் போரில் ஈடுபடுவதாக ஹிஸ்புல்லா அமைப்பு பகிரங்கமாக அறிவித்தது. மேலும் சுன்னி கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக சிரிய அரசாங்கத்தை ஆதரிப்பதில் ஈரானிய மற்றும் ரஷ்ய படைகளுக்கு உதவ ஏழாயிரம் போராளிகளை அனுப்பியது. 2019 இல் ஹிஸ்புல்லா தனது பல போராளிகளை திரும்பப் பெற்றது. அசாத் ஆட்சியின் இராணுவ வெற்றிக்கு ஹிஸ்புல்லா அமைப்பு ஒரு முக்கியக் காரணமாக இருந்தார்கள். சிரியா போரில் ஈடுபட்டதால் ஹிஸ்புல்லா அமைப்பு ஒரு வலுவான இராணுவ சக்தியாக மாற உதவியது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நிற்கும் நாடுகள்
ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் குழுவான ஹிஸ்புல்லா ஏற்கனவே இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்ததில் இருந்து, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லெபனான், துருக்கி, சிரியா, ஏமன், ஈராக் மற்றும் சூடான் ஆகிய நாடுகள் செயல்பட்டு வருகிறது.
மேலும் படிக்க - 500 பேரின் கதி என்ன? காசாவில் 900 ஆண்டுகள் பழமையான சர்ச் மீது குண்டு வீசிய இஸ்ரேல்
ஹமாஸ் தலைவர் ஈரான் வெளியுறவு அமைச்சர் உரையாடல்
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் இருவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேசியதாகக் கூறப்பட்டு உள்ளது. அதாவது இருவருக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது. இந்த உரையாடலில் காசா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான அடக்குமுறை குறித்து விவாதித்ததாக ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைச் சொல்கிறோம். இந்த தாக்குதலில், 1,400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 212 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
இஸ்ரேல் எதிராக முழு வீச்சில் ஹிஸ்புல்லா களம் இறங்குமா?
காசா மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் தரைவழி ஆக்கிரமிப்பு, இஸ்ரேல் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்த ஹஸ்புல்லாவைத் தள்ளக்கூடும். ஹஸ்புல்லா அமைப்பு ஹமாஸ் போராளி குழுவை விட அதிக இராணுவ திறன்களைக் கொண்டிருப்பதால் மிகப்பெரிய அளவில் தாக்குதல் ஏற்படலாம். ஆனால் ஹிஸ்புல்லா எவ்வளவு தூரம் செல்வார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. உள்நாட்டில் அரசியல்ரீதியாக ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு குறைந்து வருவதால், இஸ்ரேல் எதிராக முழு வீச்சில் களம் இறங்க அது தயக்கம் காட்டக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயார்
ஹமாஸை ஒழிக்கும் நோக்கில் இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தி வரும் வேளையில், தற்போது தரைவழித் தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது. தரைவழித் தாக்குதலுக்காக காசாவைச் சுற்றிலும் டாங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ