பிரபல பேருந்து தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலாண்ட் தனது புதிய ஆலையை ஆந்திராவில் அமைக்கவுள்ளது!
ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
தற்போது அமையவுள்ள இந்த ஆலை ஆனது ஆந்திராவில் அமையும் முதல் ஆலை ஆகும். கிருஷ்ணா மாவட்டத்தின் விஜயவாடா-வில் இருந்து சுமார் 40KM தொலைவில் உள்ள மல்லவல்லி என்கின்ற கிராமத்தில் சுமார் 75 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஆலை நிறுவப்படவுள்ளது. புதிய தொழில்நுட்பத்திலான உயர்தர பேருந்துகளை இந்த ஆலை மூலம் தயாரிக்க அசோக் லேலண்ட் திட்டமிட்டுள்ளது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான வினோத்.கே.தாசரி தெரிவிக்கையில்,... இந்த ஆலை ஆனது ஆண்டுக்கு 4,800 பேருந்துகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த ஆலை அமைக்கப்படுவதன் மூலம் ஆந்திராவில் சேவை பயிற்சி மையங்கள் உள்ளிட்ட தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 5000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதனால் பயனடைவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்!