சமீபத்திய தகவல்களின்படி, ATM-களில் இனி ரூ. 2000 நோட்டுகள் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் 2019 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தி விட்டது என ஊகங்கள் மற்றும் வதந்திகள் வந்தன. இது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எந்த உறுதிப்படுத்தலும் அப்போது அவ்ரவில்லை.
2000 ரூபாய் நோட்டுகள் உண்மையாகவே தடை செய்யப்பட்டுள்ளதா? இது தொடர்பான அனைத்து விவரங்களையும் பார்க்கலாம்.
மத்திய வங்கி (Central Bank) தனது ATM –களில் 2000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதில்லை. ரிசர்வ் வங்கியும் தற்போது இதை நிறுத்தியுள்ளது.
மற்ற வங்கிகளும் ரூ. 100, ரூ. 200, மற்றும் ரூ. 500 ஆகிய நோட்டுகளை மட்டும் தங்கள் ATM –களில் வைக்கத் துவங்கியுள்ளனர்.
மத்திய வங்கியின் டிவிஷன் தலைவர் எல்.பி. ஜா, ரூ. 2000 நோட்டுகள் பல மாதங்களாக ரிசர்வ் வங்கியில் (Reserve Bank) இருந்து பெறப்படவில்லை என்று கூறியுள்ளார். ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாயின் என்க்ளௌசரில் உள்ள 58 எம்.டி.எம் இயந்திரங்களும் அகற்றப்பட்டுள்ளன. இதனால் அதிக நோட்டுகளை இனி ATM இயந்திரங்களில் ஏற்ற முடியும்.
ATM இயந்திரங்களில் ரூ. 100, ரூ. 200, மற்றும் ரூ. 500 ரூபாய் நோட்டுகள் மட்டும்தான் லோட் செய்யப்பட்டுள்ளன என யூனியன் வங்கியும் (Union Bank) தெரிவித்துள்ளது. ATM இயந்திரங்களில் 2000 நோட்டுகள் வைக்கப்படுவதற்கான சத்தியக்கூறுகளும் இல்லை என வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் பெறப்படவில்லை என யூனியன் வங்கி தெரிவித்துள்ளது.
பரோடா உ.பி. வங்கியின் பிராந்திய மேலாளர் அகிலேஷ் சிங் கூறுகையில், பெரிய அளவில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 500, ரூ. 1000 மற்றும் ரூ. 2000 நோட்டுகளே கிடைக்கின்றன. 2000 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை என்று கூறினார்.
அனைத்து இடங்களிலும் இரண்டாயிரம் நோட்டுகளின் நெருக்கடி நிலவுகிறது என்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏஜிஎம் சந்தோஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். கூடுதலாக, கிளைகளில் டெபாசிட் செய்யப்படும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் ATM –களில் நிரப்பப்படுவதில்லை.
ALSO READ: HDFC வாடிக்கையாளர்கள் உஷார்: வங்கிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது RBI
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR