அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பார்ட்! டிஏ நிலுவை குறித்து வெளியாக தகவல்!

மூன்றாவது நிலுவை தொகை மட்டுமல்லாது அரசு ஊழியர்களின் கணக்கில் நான்காவது தவணை தொகை வைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 21, 2022, 06:35 PM IST
  • டிஏ உயர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
  • மூன்றாம் தவணை நிலுவைத் தொகையை மகாராஷ்டிர அரசு அறிவித்தது.
  • நான்காவது தவணை தொகை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பார்ட்! டிஏ நிலுவை குறித்து வெளியாக தகவல்! title=

அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, ஏழாவது ஊதியக் குழு பற்றிய மத்திய அரசின் அறிவிப்பிற்கு பிறகு பல மாநிலங்களும் டிஏ-வை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன, அதன்படி மத்திய அரசு ஊளியர்களின் டிஏ தொகைக்கு ஈடாக, ஒவ்வொரு மாநிலங்களின் ஊழியர்களின் டிஏ-வும் சமமானதாக உள்ளது.  தற்போது மகாராஷ்டிரா அரசு அதன் ஊழியர்களுக்கு 34% டிஏவை உயர்த்தி ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது.  இதுவரை நிலுவையில் இருந்த மூன்றாவது தவணையை மகாராஷ்டிர அரசு அதன் ஊழியர்களின் கணக்கில் வைக்கப்போவதாக செய்திகள் கூறப்பட்டுள்ளது.  ஏற்கனவே நிலுவையில் இருந்த இரண்டு தவணை தொகைகளை முன்னர் அரசு ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது.

7வது ஊதியக்குழுவின் கீழ் அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் மூன்றாம் தவணை நிலுவைத் தொகையை வழங்க மகாராஷ்டிர அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  மகாராஷ்டிர அறிவித்திருந்தபடியே தற்போது ஊழியர்களின் கணக்கில் பணம் வரத் தொடங்கியுள்ளது, மூன்றாவது நிலுவை தொகை மட்டுமல்லாது அரசு ஊழியர்களின் கணக்கில் நான்காவது தவணை தொகை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த 2019-ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் மாநில அரசு ஊழியர்களுடன் ஜில்லா பரிஷத் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கும் 7வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டது. 

மேலும் படிக்க | இந்த தகவலை யாருக்கும் அனுப்ப வேண்டாம்! ஊழியர்களுக்கு EPFO எச்சரிக்கை!

அதனைத்தொடர்ந்து 2019-20-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் மற்றும் ஐந்து தவணைகளில், ஊழியர்களுக்கு அவர்களின் நிலுவைத் தொகையை வழங்க அரசாங்கம் முடிவு செய்தது.  இதன்படி அரசு இதுவரை ஊழியர்களுக்கு இரண்டு தவணைகளை வழங்கியுள்ள நிலையில் தற்போது மூன்றாவது தவணையையும் வழங்கப்போகிறது.  அதனைத்தொடர்ந்து படிப்படியாக நான்காவது தவணை மற்றும் ஐந்தாவது தவணை என அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதன் கீழ், குரூப் ஏ அதிகாரிகளுக்கு, ஊழியர்களில் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை கிடைக்கும், அதே சமயம் குரூப் பி அதிகாரிகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை கிடைக்கும்.  குரூப் சி அதிகாரிகளுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையும், நான்காம் பிரிவினருக்கு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரையும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | EPFO ஈ நாமினேஷன் மூலம் கிடைக்கும் பல வித பயன்கள்: முழு விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News