8வது ஊதியக்குழு, சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் பல நல்ல செய்திகள் கிடைத்தன. அவர்களது ஊதியத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் ஊழியர்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. அவர்களது நீண்ட நாள் கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அடுத்த ஊதியக்குழு, அதாவது 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகின்றது. இது குறித்து அரசு முறையான அறிவிப்பை வெளியிடவில்லை. எனினும் புதிய சம்பள கமிஷன் அமைப்பது குறித்து விவாதம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு மோடி அரசு இது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
8வது ஊதியக் குழுவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன
டெல்லியில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சங்கங்கள் 8வது ஊதியக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக, அடுத்த ஊதியக் குழுவின் நிலை குறித்து அரசு ஊழியர்கள் விளக்கம் கோரியுள்ளனர். இதற்கு அரசு சம்மதித்தால் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் பெரிய உயர்வு ஏற்படும். 8வது ஊதியக் குழு இன்னும் விவாதத்தில்தான் உள்ளது. ஆனால் அடுத்த சம்பள கமிஷன் திட்டமிடப்பட்டுவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இது தொடர்பான விஷயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பளத்தில் பெரிய ஏற்றம் இருக்கும்-
2024 இல் பொதுத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. எனவே, மத்திய அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில், ஊழியர்களுக்கு புதிய சம்பள கமிஷன் பற்றிய நல்ல செய்தியை அரசு அளிக்கக்கூடும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். இருப்பினும், அடுத்த ஆண்டிலேயே சம்பள கமிஷன் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கணிப்பது இப்போது இயலாத காரியமாகும். 8-வது ஊதியக் குழு (8th Pay Commission) அமல்படுத்தப்பட்டால் பணியாளர்கள் பெரிதும் பயனடைவார்கள். மற்றொரு பக்கம், ஊதியக் குழுவில் மாற்றங்களை கொண்டு வருவது பற்றியும் அரசு ஆலோசித்து வருகிறது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கும்
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு அமல்படுத்தி வரும் ஊதியக் குழுவில், ஊழியர்களின் (Central Government Employees) அடிப்படை சம்பளம் பெருமளவில் உயர்த்தப்படுகிறது. பத்தாண்டுகள் என்ற கணக்கில் 2026 அம் ஆண்டு அடுத்த ஊதியக்கமிஷன், அதாவது 8வது ஊதியக்கமிஷன் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் அனைத்து ஊழியர்களும் பெரிய வகையில் பயனடைவார்கள். ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக ஊழியர்கள் தரப்பிலிருந்து இருந்து வருகிறது. இதற்கு இப்போது அரசாங்கம் செவி சாய்க்கலாம் என கூறப்படுகின்றது. அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57 மடங்கிலிருந்து நேரடியாக 3.0 மடங்கு உயர்த்தலாம் என கூறப்படுகின்றது. எனினும் 8வது ஊதியக் குழுவில் ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் (Fitment Factor) 3.68 மடங்காக உயரக்கூடும். அதாவது ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 44.44 சதவீதம் அதிகரிக்கலாம். 7வது ஊதியக் குழுவின் கீழ், ஊழியர்கள் 2.57 (ஃபிட்மென்ட் பேக்டர்) அடிப்படையில் அடிப்படை சம்பளமாக ரூ.18 ஆயிரம் பெறுகின்றனர். இது 26 ஆயிரம் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ