தற்பாேது வேலைக்கு செல்லும் பலர், சிறு-குறு தொழில் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக, கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்த பணத்தை ஒரு தாெழிலில் முதலீடு செய்கின்றனர். அப்படி செய்வது நன்மை பயக்கும் என்றாலும், இது குறித்து முறையாக நன்கு ஆராய்ச்சி செய்திருத்தல் அவசியமாகும். அப்படி, அதிக லாபம் தரும் வாழை சாகுபடி தொழில் குறித்து இங்கு பார்க்கலாம்.
வாழை சாகுபடி:
தமிழ்நாட்டை பொறுத்தவரை வாழைக்கு பெரிய மார்கெட் உள்ளது. வாழை மரத்தில் இருந்து வரும் வாழைக்காய் முதல், பழம், வாழைத்தண்டு, நார், வாழைப்பூ என அனைத்துமே இதில் பயன்படும். அனைத்திற்கும் பல ஆயிரங்களில் லாபம் உண்டு. தமிழகத்தை பொறுத்தவரை, இங்கு பலர் வாழை சாகுபடி வணிகத்தில் ஈடுபடுகின்றனர். இதற்காக தேவைப்படும் முதலீட்டு தொகை என்ன? எவ்வளவு வருமானம் வரும்? இங்கு பார்ப்போம்.
வாழை சாகுபடி வணிகம்..
வாழை சாகுபடியை, பணப்பயிர் என கூறுவர். காரணம், இதில் இருக்கும் மொட்டு முதல் காய் வரை அனைத்தையும் மார்கெட்டில் விற்கலாம், உணவு பொருளாக பயன்படுத்தலாம். விவசாயத்தில் ஈடுபாடு உள்ளவர்கள், இந்த தொழிலில் நம்பி இறங்கலாம். வாழை விவசாயத்தை பொறுத்தவரை, குறைந்தபட்ச முதலீடு இருந்தாலே போதும், நல்ல உற்பத்தியையும் லாபத்தையும் பார்க்கலாம்.
முதலீடு எவ்வளவு?
ஒரு வாழைப்பழ பயிரை பயிரிட சுமார் ரூ. 50 ஆயிரம் தேவைப்படலாம் என வணிக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதிலிருந்து, சுமார் 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு பார்க்கலாமாம். வாழையை பயிரிட இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், உரங்களுக்கு ஆகும் செலவுகளை குறைக்கலாம். வாழைப்பழங்களை அறுவடை செய்த பின்னர் கழிவுகள் தேங்கும். இதை அப்படியே மறு சுழற்சி செய்து, மீண்டும் உரமாக உபயோகிக்கலாம். இதனால் வாழை மரத்தின் விளைச்சல்களும் அதிகமாகவே இருக்கலாம்.
5 ஆண்டுகளுக்கு கிடைக்கும் வருமானம்..
வாழை மரத்தை நட்டால், அதனால் 5 ஆண்டுகளுக்கு வருமானம் ஈட்டலாம் என்கின்றனர் ஏற்கனவே வாழை மரத்தை விவசாயம் செய்து வருபவர்கள். இந்த மரங்கள், 5 ஆண்டுகளுக்கு காய்களை கொடுக்கின்றன. ஆனால், இதனை பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். வாழைப்பழ விவசாயத்தை நம்பி முதலீடு செய்தால், அதில் இருக்கும் வருமானமும் பன்மடங்காக இருக்கும். இதில், ஆபத்தும் குறைவு. ஒரு வாழை மரத்தில், 60 முதல் 70 கிலோ வாழை மர பயிர்களை மகசூல் செய்யலாம்.
மேலும் படிக்க | NSC, FD முதலீட்டை விட அதிக வட்டி தரும் RBI சேமிப்பு பத்திரம்... முழு விபரம் இதோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ