Bank Holidays in June 2024: ஜூன் மாதம் தொடங்க உள்ளது. வங்கி தொடர்பான பணிகள் உள்ளவர்கள் அவற்றை ஜூன் மாத தொடக்கத்திலேயே செய்து விடுவது நல்லது. ஒவ்வொரு மாதத்தையும் போலவே, ஜூன் மாதத்திலும் பல நாட்கள் வங்கி விடுமுறைகள் இருப்பதால் அவற்றுக்கு ஏற்றபடி உங்கள் பணிகளை திட்டமிடுவது நல்லது. இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வெளியிட்ட ஜூன் வங்கி விடுமுறைகளுக்கான முழுப் பட்டியலின்படி, ஜூன் மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜூன் மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, ஜூன் மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. இருப்பினும், ரிசர்வ் வங்கி தேசிய அளவில் வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் பல திருவிழாக்கள், பண்டிகைகள் மற்றும் சனி மற்றும் ஞாயிறும் இந்த மாத விடுமுறை நாட்களுக்கான பட்டியலில் அடங்கும். அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இந்த பட்டியலில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் மாதத்தில் வங்கிகள் எப்போது மூடப்பட்டிருக்கும்?
இந்த மாதம் வங்கிக்கு பணி நிமித்தமாக செல்லும்முன் கண்டிப்பாக வங்கி விடுமுறை நாட்களை பற்றி தெரிந்துகொள்வது நல்லது. இதன் மூலம் வங்கி விடுமுறை அன்று வங்கிக்கு சென்று அதனால் நேரம் விரயமாவதை தவிர்க்கலாம். ஆகையால் ஜூன் மாதத்தில் வங்கிகள் எப்போது மூடப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியம். ஆர்பிஐ வெளியிட்டுள்ள ஜூன் 2024க்கான வங்கி விடுமுறைப் பட்டியலின் அடிப்படையில், ஜூன் 2024ல் வரவுள்ள வங்கி விடுமுறைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜூன் 2024 இன் வங்கி விடுமுறை நாட்கள்:
- 2 ஜூன் 2024: ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
- 8 ஜூன் 2024: இரண்டாவது சனிக்கிழமை காரணமாக அன்று நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- 9 ஜூன் 2024: ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- 16 ஜூன் 2024: ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
- 22 ஜூன் 2024: நான்காவது சனிக்கிழமை காரணமாக அன்று நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- 26 ஜூன் 2024: ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
- 30 ஜூன் 2024: ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்
ஜூன் மாதத்தில், பக்ரித் (Bakrid 2024), வட் சாவித்ரி விரதம் மற்றும் மக்களவைத் தேர்தல்கள் (Lok Sabha Elections 2024) உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாட்டில் மாநில அளவில் பல நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
- 9 ஜூன் 2024: மகாராணா பிரதாப் ஜெயந்தி நாளில், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- 10 ஜூன் 2024: ஸ்ரீ குரு அர்ஜுன் தேவ் ஜியின் தியாக தினத்தை முன்னிட்டு பஞ்சாபில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- 14 ஜூன் 2024: பஹிலி ராஜா காரணமாக ஒடிசாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- 15 ஜூன் 2024: ஒடிசாவில் ஒய்எம்ஏ தினம் மற்றும் ராஜா சங்கராந்தி காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- 17 ஜூன் 2024: ஈத்-உல்-அழாவின் (பக்ரித்) பண்டிகையை ஒட்டி நாடு முழுதும் ப்லா வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- 21 ஜூன் 2024: வட் சாவித்திரி நோன்பு காரணமாக பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
வங்கி விடுமுறை நாட்களில் ஆன்லைன் வங்கிச்சேவைகளைப் பயன்படுத்தலாம்
இவற்றைத் தவிர, நாட்டில் ஏழாவது கட்ட மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஜூன் 1 ஆம் தேதி பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. வங்கிகள் மூடப்பட்டிருக்கும் போது, வங்கி தொடர்பான எந்த பணிகளையும் வங்கி வாடிக்கையாளர்களால் செய்ய முடியாது. ஆகையால், அந்த நாட்களில் வங்கி தொடர்பான பணிகளை வங்கி வேலை நாட்களில் முடித்துக்கொள்வது நல்லது. எனினும். வங்கி விடுமுறை நாட்களலும் வங்கி வாடிக்கையாளர்கள் (Bank Customers) ஆன்லைன் வங்கி சேவைகளைப் (Online Banking Services) பயன்படுத்தி தங்கள் பணிகளை செய்யலாம். அவை பெரும்பாலும் 24/7 வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 பரிசுகள்: டிஏ ஹைக், புதிய ஊதியக்குழு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ