ஜாக்பாட் அறிவிப்பு.. வெறும் 500 ரூபாய்க்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர்: அரசு உத்தரவு

LPG Gas Cylinder: அதிகரித்து வரும் பணவீக்கத்தில் ஒரு நிம்மதியான செய்தி வந்துள்ளது. அந்த வகையில் 76 லட்சம் குடும்பங்களுக்கு இனி ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 19, 2023, 02:07 PM IST
  • ரூ.500க்கு சமையல் கேஸ் சிலிண்டர்.
  • மானியம் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்படும்.
  • உங்கள் வங்கிக் கணக்கை ஜன் ஆதாருடன் இணைக்க வேண்டும்.
ஜாக்பாட் அறிவிப்பு.. வெறும் 500 ரூபாய்க்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர்: அரசு உத்தரவு title=

500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் பெறலாம்: நீங்கள் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் பெற விரும்பினால், இந்த செய்தியை கட்டாயம் படியுங்கள். ஏனெனில் தற்போது மார்ச் மாதத்தில், எல்பிஜி கேஸ் சிலிண்டர் உண்மையில் மொத்தம் ரூ.500க்கு கிடைக்கிறது, அதை எளிதாகப் பெறலாம். இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் ராஜஸ்தான் அரசு, அம்மாநில மக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளது. உண்மையில், வீட்டில் உபயோகம் செய்யப்படும் கேஸ் சிலிண்டர் அதாவது எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கு அரசாங்கத்தால் தற்போது மானியம் வழங்கப்படுகிறது.

சமையல் கேஸ் சிலிண்டர் விலை தற்போது ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தேர்தல் நடைபெற இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி 500 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் தந்து கொண்டிருக்கிறது. இதனுடன், ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியமும் வழங்கப்படுகிறது. மேலும் மாநிலத்தின் சுமார் 73 லட்சம் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் பலன் வழங்கப்படும்.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரயில்வேயின் புதிய நடவடிக்கை இதோ

இவர்களுக்கு பலன் கிடைக்கும்
நீங்கள் பிபிஎல் அல்லது உஜ்வாலா யோஜனாவின் கீழ் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிப்பவராக இருந்தால், நீங்கள் மாதம் ரூ.500க்கு கேஸ் சிலிண்டரைப் பெறலாம், ஆனால் இதற்கு உங்கள் வங்கிக் கணக்கை ஜன் ஆதாருடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த, மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடம் இருந்து பிபிஎல் மற்றும் உஜ்வாலா யோஜனா பட்டியலை ராஜஸ்தான் அரசு கோரியுள்ளது. தரவு கிடைத்ததும், இதற்கான செயலாக்கம் தொடங்கப்படும். இதனிடையே இந்த திட்டம் ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மானியம் வங்கிக் கணக்கில் வரும்
இந்த திட்டத்தின் கீழ், கேஸ் இணைப்புதாரர்களின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை நேரடியாக மாற்றப்படும். இதற்கு கேஸ் இணைப்புதாரர்கள் தங்களது ஜன் ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் லிங்க் செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ், மீதமுள்ள மானியம் ரூ.610 பயனாளியின் கணக்கிற்கு அனுப்பப்படும். அதே நேரத்தில், உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளின் கணக்கில் 410 ரூபாய் மானியமாக அனுப்பப்படும். மானியத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாற்றப்படும். இதன் மூலம், இத்திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களுக்கு குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.

இதனிடையில் சத்தீஸ்கர் மாநிலத்திலும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த மாநிலத்திலும் ரூபாய் 500க்கு சிலிண்டர் கொடுக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் செய்தியாளர்களிடம் கூறிய போது சமையல் கேஸ் 500 ரூபாய்க்கு கொடுப்பது குறித்து ஆலோசனை நடந்து கொண்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்து முடிவு செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே ராஜஸ்தானை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் 500 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஏசி பெட்டியில் பயணிப்பவரா? ரயில்வேயின் இந்த ரூல்ஸ் தெரியுமா? பாத்து நடந்துக்கோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News