இலவச ரேஷன் திட்டம்: இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. அதன்படி நீங்களும் இலவச ரேஷன் பெற விரும்பினால், அரசு தற்போது அதற்கான தேதியை அறிவித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் தேதிகள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ தகவலின்படி, நீங்கள் இன்று அதாவது ஏப்ரல் 13 முதல் நீங்கள் இலவச ரேஷன் பெறத் தொடங்குவீர்கள். இதனுடன் மத்திய, மாநில அரசுகள் மூலம் பல சிறப்பு வசதிகள் உங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
யோகி அரசு தேதிகளை அறிவித்தது
இந் நிலையில் தற்போது இலவச ரேஷன் குறித்த தகவல்களை அளித்து, யோகி அரசு தேதிகளை அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 13 முதல் 24 வரை உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டத்திலும் இலவச ரேஷன் விநியோகிக்கப்படும். இதற்கிடையில் இந்த இலவச ரேஷன் பொருள் கிடைக்கும் வசதி 2023-ம் ஆண்டு இறுது வரை ரேஷன் வழங்கப்படும் என்று முன்னதாக தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தகக்கது.
மேலும் படிக்க | 8th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, விரைவில் 44% ஊதிய உயர்வு
81.35 கோடி பேர் பயன் பெறுகின்றனர்
கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு, ஏழைக் குடும்பங்களுக்கு அரசால் இலவச ரேஷன் வசதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் சுமார் 81.35 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வசதியை மோடி அரசு வழங்கி வருகிறது. மேலும் இந்த வசதி டிசம்பர் 2023 வரை வழங்கப்படும். அத்துடன் இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு 5 கிலோ உணவு தானியங்களை அரசு இலவசமாக வழங்கி வருகின்றது.
இலவச ரேஷன் யாருக்கு கிடைக்கும்? எவ்வளவு வழங்கப்படும்?
இது தவிர அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு 14 கிலோ கோதுமையும், 21 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. மறுபுறம் பொதுப் பிரிவினரைப் பற்றி பேசினால், இந்த பிரிவினவர்களுக்கு 2 கிலோ கோதுமையும், 3 கிலோ அரிசியும் வழங்கபடுகிறது. அந்தவகையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உ.பி.யில் இலவச ரேஷன் சலுகை ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 24 வரை கிடைக்கும். எனவே மக்கள் இன்று மற்றும் நாளை ரேஷன் கடையில் தங்களின் இலவச ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ