EPF உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: விதிகளில் மாற்றம், அதிக ஓய்வூதியம் கிடைக்குமா?

EPS Pension: மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறையின் மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் கிளைகளில் எங்கு வேண்டுமானாலும், ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 8, 2024, 11:11 AM IST
  • EPS-95 விதிகளில் மாற்றம்.
  • EPS-95 Pension Fund பற்றி தொழிலாளர் அமைச்சர் கூறியது என்ன?
  • மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறை.
EPF உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்: விதிகளில் மாற்றம், அதிக ஓய்வூதியம் கிடைக்குமா? title=

EPS Pension: PF உறுப்பினர்களுக்கு தொடர்ந்து பல நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) வசதிக்காக அவ்வப்போது பல புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது, சில பழைய விதிகளில் மாற்றங்களையும் செய்கிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் பிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதை பற்றி இங்கே காணலாம். 

Employee Pension Scheme

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF) மற்றும் ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம் (EPS)ஆகியவற்றை நிர்வகிக்கின்றது. ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள ஓய்வுதியதாரர்களுக்கு ஒரு சிறந்த செய்தி உள்ளது. இனி ஓய்வுபெற்ற ஊழியர்கள் எந்த வங்கியிலும் அல்லது கிளையிலும் தங்கள் ஓய்வூதியத்தை பெற முடியும். ஜனவரி முதல் இந்த வசதி அமலுக்கு வரும். இந்தத் தகவலை சில நாட்களுக்கு முன்னர் தொழிலாளர் அமைச்சகம் வழங்கியது. 

EPS-95 விதிகளில் மாற்றம்

தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா 1995 ஆம் ஆண்டு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கான மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறைக்கான (CPPS) முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறையின் மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் கிளைகளில் எங்கு வேண்டுமானாலும், ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளலாம். மன்சுக் மாண்டவியா, EPFO ​​இன் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த EPS-95 Pension Fund பற்றி தொழிலாளர் அமைச்சர் கூறியது என்ன?

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறைக்கு ஒப்புதல் வழங்குவது, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) நவீனமயமாக்கல் திசையில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இதன் கீழ், ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தை நாட்டில் உள்ள எந்த வங்கியிலும், எந்த கிளையிலும் பெற முடியும். ஓய்வூதியம் பெறுவோரின் நீண்டகால பிரச்சனைகளுக்கு இந்த முயற்சி ஒரு பெரிய தீர்வாக அமைகின்றது. இந்த அமைப்பு தடையற்ற மற்றும் திறமையான விநியோக முறையை உறுதி செய்கிறது.’ என்று கூறினார்.

இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) தேவைகளை சிறப்பாகச் பூர்த்தி செய்யும் வகையில், இபிஎஃப்ஓ -வை மிகவும் வலுவான, நேர்த்தியான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்பாக மாற்றுவதற்கான முயற்சிகளில் இந்த நடவடிக்கை ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்றும் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அசத்தல் அப்டேட்: அகவிலைப்படி உயர்வு... நாளை அறிவிப்பா?

மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறை (Centralized Pension Payments System)

மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறையானது EPFO ​​இன் 78 லட்சம் EPS-95 ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மையப்படுத்தப்பட்ட அமைப்பு, ஓய்வூதியம் செலுத்தும் ஆணைகளை (PPOs) ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு மாற்றாமல், நாடு முழுவதும் ஓய்வூதியம் தடையின்றி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும்.

ஓய்வுக்குப் பிறகு சொந்த ஊருக்குச் செல்லும் ஓய்வூதியதாரர்களுக்கு இது பெரும் நிவாரணமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. EPFO இன் தற்போதைய தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தின் மையப்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப சாதனத்தின் (CITES 2.01) ஒரு பகுதியாக இந்த வசதி ஜனவரி 1, 2025 முதல் தொடங்கப்படும்.

மற்றொரு குட் நியூஸ்

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் தொடர்பாக நிதி அமைச்சகம் ஒரு OM, அதாவது அலுவலக குறிப்பை வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியங்கள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு இந்த அலுவலக குறிப்பில் வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

"அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலம் மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டத்தில் உள்ள விதிகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய செயலாக்க மையங்கள் (CPPCs), மார்ச் மாதத்தைத் தவிர பிற மாதங்களில், மாதாந்திர ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதியத்தை ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவரின் கணக்கில் மாதத்தின் கடைசி நாளுக்குள் வரவு வைக்க வேண்டும். மார்ச் மாதத்தில், அடுத்த மாதத்தின், அதாவது ஏப்ரல் மாதத்தின் முதல் வேலை நாளில் வரவு வைக்கப்பட வேண்டும்” என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் (Minimum Monthly Pension)

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் உள்ளது. குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7500 ரூபாயாக உயர்த்த ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை இப்போது அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஓய்வூதியதாரர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த இந்த உயர்வு முக்கியமானதாக கருதப்படுகின்றது.

மேலும் படிக்க | Emergency Fund: அவசரகால நிதி என்றால் என்ன? இதற்கான அவசியம் என்ன? விரைவாக எப்படி சேர்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News