Budget 2024: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தக்கல் செய்யவுள்ளார். சம்பள வர்க்கத்தினர், தொழில்துறையினர், மத்திய அரசு ஊழியர்கள், ரியல் எஸ்டேட் துறை, சாமானியர்கள், மூத்த குடிமக்கள், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் இந்த பட்ஜெட் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இது என்பதால், பல முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
சாமானியர்களின் பொதுவான எதிர்பார்ப்புகள் வரி விலக்கு, வரிச் சலுகைகள், வரி அடுக்குகளில் மாற்றம் ஆகியவற்றை சுற்றியுள்ளன. தனிநபர் வரிவிதிப்பு முறையில் என்னென்னெ எதிர்பார்ப்புகள் உள்ளன? இந்த அறிவிப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிடிஓ இந்தியாவின் கார்ப்பரேட் டேக்ஸ், டேக்ஸ் & ரெகுலேட்டரி சர்வீசஸ் பிரிவின் ரகுநாதன் பார்த்தசாரதி, தனிநபர் வரிவிதிப்பு தொடர்பான 4 முக்கிய புள்ளிகள் பற்றி கூறியுள்ளார். இதில் உள்ள அம்சங்கள் சம்பளம் பெறும் தனிநபர்கள் மற்றும் சாமானியர்களின் மிகவும் எதிர்பார்க்கப்படும் விஷயங்களாக உள்ளன.
சம்பள வர்க்கத்தினரின் முக்கியமான எதிர்பார்ப்புகள் இதோ:
1. வரம்புகளில் மாற்றம்
- பிரிவு 80C வரம்பை 1.5 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சமாக உயர்த்துதல்
- அதிகரித்து வரும் உடல்நலக் காப்பீட்டுச் செலவுகள் காரணமாக, பிரிவு 80D வரம்பை 50,000 ரூபாயாக (பெற்றோருக்கான விலக்குகள் தவிர்த்து) அதிகரிப்பது.
- வாழ்க்கைச் செலவை சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில் சம்பள வருமானத்தின் மீதான நிலையான விலக்கை ரூ. 50,000 இலிருந்து ரூ. 75,000 அல்லது 1 லட்சம் ஆக்குவது.
- அதிகரித்து வரும் உடல்நலக் காப்பீட்டுச் செலவுகள் காரணமாக பிரிவு 80C வரம்பை 1.5 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சமாக உயர்த்துதல் (பெற்றோருக்கான கழித்தலைத் தவிர)
2 வணிக வருமானம் கொண்ட தனிநபர்கள் மற்றும் HUF களுக்கு ஆண்டுதோறும் புதிய மற்றும் பழைய வரி விதிகளுக்கு இடையே தேர்ந்தெடுப்பதற்கான வசதி.
3 வீட்டு வாடகை கொடுப்பனவு (House Rent Allowance) புதிய வரி முறைக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. கூடுதலாக, கட்டுமானக் காலத்தில் செலுத்த வேண்டிய வட்டிக்கான விலக்கு, பணம் செலுத்திய ஆண்டிலேயே அனுமதிக்கப்படக்கூடும். HRA விலக்கு வரம்பு அதிகரிக்கப்படும். இது தற்போதைய 10% இல் இருந்து அடிப்படை சம்பளத்தில் 5% ஆகக் குறைக்கப்படலாம்.
4 வீட்டுச் சொத்து [பிரிவு 23(1)(c)]: கடந்த ஆண்டுகளில் வீடு வாடகைக்கு விடப்பட்டு, அதன் பிறகு காலியாகி, வாடகைக்கு விடப்படும் நிலையில் இருந்தாலும், முந்தைய ஆண்டு முழுதும் காலியாக இருந்தால், அதற்கு காலியிட உதவித்தொகையின் பலன் கிடைக்குமா என்பது பற்றிய தெளிவு.
வீட்டுக்கடன்
வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Rules) பிரிவு 24 -இன் கீழ் வீட்டுக்கடனுக்கான (House Loan) வரி விலக்கு (Tax Exemption) 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று ரியல் எஸ்டேட் துறை நிபுணர்களும் பொருளாதார நிபுணர்களும் கருத்துகிறார்கள். இப்படி நடந்தால் வீட்டுக் கடன் வாங்கியவர்களின் வரிச் சுமை பெரிய அளவில் குறையும். இதுமட்டுமின்றி பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் இருக்கும் பலரது வீட்டு கனவு நிஜமாகும்.
மேலும் படிக்க | இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை: பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ