பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு பரிசு: மீண்டும் ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகையா?

Budget 2024: இந்த பட்ஜெட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகளில் மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை ஒன்றாகும். ரயில் டிக்கெட்டுகளில் தங்களுக்கு முன்பு இருந்த தள்ளுபடி மீண்டும் கிடைக்கும் என்று மூத்த குடிமக்கள் (Senior Citizens) நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 19, 2024, 04:50 PM IST
  • மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகை.
  • ரயில்வேயில் யார் மூத்த குடிமக்களாக கருதப்படுகிறார்கள்?
  • சலுகையை நிறுத்தியதால் இந்திய ரயில்வேயின் வருவாய் உயர்ந்ததா?
பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு பரிசு: மீண்டும் ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகையா? title=

Budget 2024: பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் பல வித எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்ஜெட் பொது மக்கள், தொழில்துறையினர், வரி செலுத்துவோர் என அனைத்து தரப்பு மக்களிடமும் அதிக அளவிலான எதிர்பார்ப்புகளை எதிர்பார்த்துள்ளது. 

இந்த பட்ஜெட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகளில் மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை ஒன்றாகும். ரயில் டிக்கெட்டுகளில் தங்களுக்கு முன்பு இருந்த தள்ளுபடி மீண்டும் கிடைக்கும் என்று மூத்த குடிமக்கள் (Senior Citizens) நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக பட்ஜெட் நெருங்கும் இந்த வேளையில், இது பற்றி அதிகம் பேசப்பட்டு வருகின்றது. முன்னர் மூத்த குடிமக்களுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், மார்ச் 20, 2020 அன்று, கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் தள்ளுபடி (Train Ticket Concession) நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகை 

கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர், நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த சலுகை மார்ச் 2020 முதல் நிறுத்தப்பட்டது. 

- முன்னதாக, மூத்த குடிமக்கள் பிரிவில் வரும் பெண்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்பட்டது.

- மூத்த குடிமக்கள் பிரிவில் வரும் ஆண்களுக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் 40 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது.

- இந்த தள்ளுபடி ராஜ்தானி மற்றும் சதாப்தி சேவைகள் உட்பட அனைத்து விரைவு மற்றும் மெயில் ரயில்களுக்கும் அளிக்கப்பட்டது. 

- இந்த சலுகை திரும்பப் பெறப்பட்டதிலிருந்து, மூத்த குடிமக்கள் ரயில் பயணங்களுக்கு மற்ற பயணிகளுக்கு இணையாக முழு கட்டணத்தையும் செலுத்தி வருகிறார்கள். 

ரயில்வேயில் யார் மூத்த குடிமக்களாக கருதப்படுகிறார்கள்?

60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவதாக ரெயில்வே கூறுகிறது. 

மேலும் படிக்க | Budget 2024: HRA, வீட்டுக்கடன், தனிநபர் வரிவிதிப்பில் காத்திருக்கும் மிகப்பெரிய அறிவிப்புகள்

சலுகையை நிறுத்தியதால் இந்திய ரயில்வேயின் வருவாய் உயர்ந்ததா?

ரயில் டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையை நிறுத்தியதன் மூலம் ரயில்வே பெரிதும் பயனடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை, சுமார் 8 கோடி மூத்த குடிமக்களுக்கு ரயில்வே இந்த சலுகைகளை வழங்கவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த காலகட்டத்தில், மூத்த குடிமக்கள் மூலம் மட்டும் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.5,800 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மானியம் நிறுத்தப்பட்டதால் கிடைத்த கூடுதல் ரூ.2,242 கோடியும் இதில் அடங்கும்.

முன்னதாக, மூத்த குடிமக்களுக்கான சலுகையை மீண்டும் கொண்டு வருவது பற்றி நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேரடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. எனினும், ஏற்கனவே அனைத்து பயணிகளுக்கும் இந்திய ரயில்வே (Indian Railways) ரயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருவதாக கூறினார். 

மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைகள் தவிர புதிய ரயில்களுக்கான அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், ரயில்வே துறையில் பாதுகாப்பு அம்சங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. கடந்த சில மாதங்களில் ரயில் விபத்துகள் அதிகமாக ஏற்பட்டு வரும் நிலையில், ரயில் பயணங்களில் பாதுகாப்புக்கு அதிக ஒதுக்கீடு செய்வது மிக முக்கியமானதாகவும் கருதப்படுகின்றது. 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி அப்டேட்: 44% ஊதிய உயர்வுடன் வருகிறதா 8வது ஊதியக்குழு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News