Benefits of ELSS: வேகமாக பணம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணமும், ஆசையும் பெரும்பாலும் நம் அனைவருக்குமே இருக்கும். வேகமாக பணம் சம்பாதிக்க விரும்பினால் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் பங்குச் சந்தையில் ரிஸ்க் அதிகம் இருப்பதும் உண்மையாகும். சந்தையை பற்றி நாம் சரியாக கணிக்காவிட்டால், அதை பற்றிய புரிதல் இல்லாவிட்டால், பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அத்தகையவர்களுக்கு, SIP ஒரு சிறந்த முதலீட்டு வழிமுறையாக இருக்கும். முறையான முதலீட்டுத் திட்டங்கள் (Systematic Investment Plan) மூலம் மியூசுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். பங்குகளில் நேரடியாக பணத்தை முதலீடு செய்வதோடு ஒப்பிடும்போது, மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்க் குறைவு.
வரி வரம்புக்குள் வரும்
மியூசுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடு வரி வரம்பிற்குள் வருகிறது. மியூசுவல் ஃபண்டுகளில் வரிச் சலுகைகளை பெறக்கூடிய சில திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்தத் திட்டம் ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம்ஸ் (ELSS) என அழைக்கப்படுகிறது. இது வழங்கும் வரிச் சலுகைகள் காரணமாக, இது வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. நீண்ட காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய முடிவு செய்பவர்கள் இந்தத் திட்டத்தை தேர்வு செய்யலாம். ELSS தொடர்பான சிறப்பு விஷயங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ELSS என்றால் என்ன? (What is ELSS?)
ELSS நிதிகளில் உள்ள மொத்த சொத்துக்களில் குறைந்தது 80 சதவீதம் பங்கு மற்றும் பங்கு தொடர்பான பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஈக்விட்டி ஃபண்டுகள் பங்கு நிதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இதில் உங்கள் பணம் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. நீண்ட கால முதலீட்டுத் திட்டம் இருந்தால், முதலீட்டாளர் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார். ஏனெனில் இதன் மூலம் சந்தை ஏற்ற இறக்கம் காரணமாக ஏற்படும் இழப்புகளை அவர்களால் ஈடுசெய்ய முடிகிறது. இருப்பினும், சந்தை நிலையானதாக இருந்தால் எதிர்மறை வருமானத்திற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | உங்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும்?
மூன்று வருட லாக் இன் பீரியட்
ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்களில், நாம் மொத்தமாக பணத்தை டெபாசிட் செய்யலாம். மேலும் SIP மூலமாகவும் செய்யலாம். என்எஸ்சி (NSC), வரி சேமிப்பு எஃப்டி (Tax Saving FD) போன்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது இதன் லாக்-இன் காலம் குறைவாக உள்ளது. இந்தத் திட்டங்களின் லாக்-இன் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். அதேசமயம் ELSS இன் லாக்-இன் காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆகும். இதற்குப் பிறகு, எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம் அல்லது உங்கள் முதலீட்டைத் தொடரலாம்.
லாக்-இன் காலத்திற்குப் பிறகு வரிச் சலுகைகள் கிடைக்கும்
3 ஆண்டுகளுக்குப் பிறகு ELSS திட்டங்களிலிருந்து பணத்தை எடுத்தால், முதலீட்டாளருக்கு வரிச் சலுகைகள் கிடைக்கும். இதில், வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் அதிகபட்ச வரம்பு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு கிடைக்கும். பழைய வரி முறையில் மட்டுமே இந்த விலக்கின் பலனைப் பெற முடியும். இது தவிர, முதலீட்டில் நாம் பெறும் வருமானத்தில் மற்ற வரி விலக்குகளைப் பெறலாம். இதில் பெறப்படும் வருமானத்திற்கு மூலதன ஆதாய வரியும் விதிக்கப்படுகிறது. ELSS இல் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு ரூ. 1 லட்சம் வரை வரி விலக்கு உண்டு. இதற்கு மேல் இருக்கும் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இது தவிர, செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
ELSS: குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு?
ELSS இல் முதலீட்டாளர் தங்கள் பட்ஜெட் மற்றும் வசதிக்கு ஏற்ப திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தைப் பெறுகிறார். குறைந்தபட்சமாக வெறும் 500 ரூபாயில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. ELSS இல் நீண்ட கால முதலீடு சிறந்த வருமானத்தை அளிக்கும் என சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மேலும் படிக்க | எல்பிஜி சிலிண்டரை இலவசமாகப் பெறலாம்.. எப்படி என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ