ஆத்திர-அவசரத்துக்கு சொத்தை வித்தாலும் 20% வரி கட்டனுமா? மூலதன சொத்து வரி டிப்ஸ்!

Capital Gains : வருமான வரிச் சட்டத்தின்படி, மூலதன சொத்துக்கள் என்ற வகையறாவில் வரும் சொத்துக்கள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 19, 2024, 09:09 PM IST
  • மூலதன ஆதாய வரி எவ்வளவு கட்ட வேண்டும்?
  • சொத்து விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டால் அதை எப்படி சரிகட்டுவது?
  • வரி விதிப்பு தொடர்பான விளக்கங்கள்
ஆத்திர-அவசரத்துக்கு சொத்தை வித்தாலும் 20% வரி கட்டனுமா? மூலதன சொத்து வரி டிப்ஸ்! title=

சொத்து வாங்குவது என்பது மக்களின் வாழ்நாள் கனவாக இருக்கும். அதிலும் குடியிருக்க வீடு, நிலம், மனை என தங்கள் பணத்தை மகிழ்ச்சியுடன் முதலீடு செய்யும் மக்கள், அவற்றை வாங்கும்போது அரசுக்கான முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக்கட்டணம் என பல கட்டணங்களை கட்டும்போது ஏற்படும் உணர்வை விட, மூலதன ஆதாய வரி என்ற வார்த்தை ஏற்படுத்தும் பீதி அதிகமாகவே இருக்கிறது.

மூலதன ஆதாய வரி

ஒருவர் தனது சொத்தை விற்கும்போது, வாங்கிய விலையை விட அதிக விலைக்கு விற்கும்போது கிடைக்கும் லாபத்திற்கு வரி கட்ட வேண்டும். இதற்கான வரி கணக்கீடு என்ன என்பதை தெரிந்துக் கொள்வதற்கு முன்னதாக, மூலதன சொத்துக்கள் வகைப்பாட்டின் கீழ் எவையெல்லாம் வருகின்றன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

மூலதன சொத்துக்கள் 
ஒரு மூலதனச் சொத்து என்பது நீண்ட காலத்திற்கு முதலீடாக வாங்கப்படும் சொத்தைக் குறிக்கிறது. எளிதாக புரிந்துக் கொள்ள வருமான வரிச் சட்டத்தின்படி, மூலதன சொத்துக்கள் என்ற வகையறாவில் வரும் சொத்துக்கள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

சொத்துக்கள்

நிலம்
கட்டிடம், வீடு
இயந்திரம்

அறிவுசார் சொத்துக்கள் 

காப்புரிமை
முத்திரை
குத்தகை உரிமைகள்

மேலும் படிக்க | என்றென்றும் தீரா மர்மங்களை கொண்ட ரகசிய பிரமிடுகள்! எகிப்தின் பிரம்மாண்டமான கிசா பிரமிடு!

பத்திரங்கள்- சொத்து

பத்திரங்களையும் மூலதன சொத்துக்கள் என்றும் அழைக்கலாம். அவற்றில் இந்தியாவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கடன் பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள் ஆகியவை அடங்கும்.

ஒரு சொத்தை நாம் வைத்திருக்கும் காலத்தின் அடிப்படையில் மூலதனச் சொத்துக்கள் வகைப்படுத்தப்படுகின்றன. மூலதன சொத்துக்கள் இரண்டு வகைப்படும். குறுகிய கால மூலதன சொத்துக்கள், நீண்ட கால மூலதன சொத்துக்கள் ஆகிய இரண்டு வகைகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

குறுகிய கால மூலதன சொத்துக்கள்

36 மாதங்களுக்கும் குறைவாக வைத்திருக்கும் மூலதனச் சொத்து "குறுகிய கால மூலதனச் சொத்து" என கருதப்படுகிறது. இருந்தபோதிலும், சில குறிப்பிட்ட சொத்துக்கள் 24 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் வரையிலானவையாக இருக்கும்.

நீண்ட கால மூலதன சொத்துக்கள்

36 மாதங்களுக்கும் மேலாக ஒருவர் வைத்திருக்கும் மூலதன சொத்துக்களை நீண்ட கால மூலதன சொத்துக்கள் என கருதலாம். நகைகள் போன்ற அசையும் சொத்துக்கள், 36 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால், நீண்ட கால சொத்துகளாக கருதப்படும். சொத்தின் வகையைப் பொறுத்து இந்தக் காலம் 12 மாதங்கள் அல்லது 24 மாதங்கள் இருக்கலாம்.

மூலதன ஆதாயங்கள்
மூலதன ஆதாயம் என்பது வரி விதிப்பின் அடிப்படையில் மாறுபடுகிறது. அதிலும் மூலதன ஆதாயங்களின் மறு முதலீடு தொடர்பான வரிச் சலுகைகள் மற்றும் வரி விகிதங்களும் மாறுபடுகின்றன.

சொத்து விற்பனையின் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 20% வரி விதிக்கப்படும். பரிசளிக்கப்பட்ட சொத்தை அல்லது உங்கள் மூதாதையர்களிடமிருந்து பெற்ற சொத்தை விற்றால்,அதற்கு மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | 7.75% வரை வட்டி தரும் HDFC வங்கி! எந்தத் தொகைக்கு எவ்வளவு வட்டி உயர்ந்தது? லேட்டஸ்ட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News