TNEB: மழை வெள்ள பாதிப்பினால் மின் கட்டணம் செலுத்தும் காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

EB Bill Vs Michaung: வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா? மழை வெள்ளத்திற்கு பிந்தைய இடர்களை சந்திக்கும் சென்னை மற்றும் சுற்றுவட்டார மக்கள்...   

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 6, 2023, 02:51 PM IST
  • புயலுக்கு பின்னரும் தொடரும் மக்களின் வேதனை
  • மின்சார கட்டணத்தை செலுத்த காலக்கெடு
  • காலக்கெடு நீட்டிக்கப்படுமா? மக்கள் கோரிக்கை

Trending Photos

TNEB: மழை வெள்ள பாதிப்பினால் மின் கட்டணம் செலுத்தும் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? title=

சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர் உணவு என அடிப்படைத் தேவைகள் அனைத்தும் அனைவருக்குமே கிடைக்காத சூழ்நிலை நிலவுகிறது. இயற்கை பேரிடரால் மக்கள் கஷ்டப்பட்டாலும், வழக்கமான பணிகளை அவர்கள் தொடர வேண்டியது காலத்தின் கட்டாயம். அதேபோல, இயற்கை பேரிடர் ஏற்படுத்திய இடர்களை மீண்டு வந்தாலும், அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டிய செலவுகள் வழக்கத்தை விட அதிகரித்து இருக்கும் என்பது அனைவருக்கும் புரிந்துக் கொள்ளக்கூடியது.

ஆனால், ஒரு சில நாட்கள் பெய்த மழை பலரின் வாழ்க்கையை பல மாதங்களுக்கு புரட்டிப் போட்டுவிடும் என்ற நிலையில், உடனடியாக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்பது, இயல்பு வாழ்க்கைக்குக் திரும்பிய பிறகு சென்னை மக்களின் முன்னால் இருக்கும் சவாலாக இருக்கிறது.

மக்கள் எதிர்க்கொள்ள வேண்டிய சவால்களில் முக்கியமானவை செலுத்த வேண்டிய கட்டணங்கள் என்று சொன்னால், அதில் மின்சார கட்டணம் பிரதானமானதாக இருக்கும். வாழ்க்கையை இயல்பாக தேவையான மின்சாரத்திற்கான கட்டணத்தை மின்சார கழகத்திற்கு காலக்கெடுவுக்குள் கட்டாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பது தமிழ்நாட்டின் வழக்கம். 

மேலும் படிக்க | ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாம இருக்கணுமா... ‘இவற்றில்’ முதலீடு செய்யுங்க!

இந்த நிலையில், மிகப் பெரிய இடரை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு, மழை வெள்ளத்தின் உடனடி பாதிப்புகளில் இருந்து மீண்ட பிறகு, மின் கட்டணம் கட்டாவிட்டால், அடுத்தகட்ட சிக்கல்கள் காத்திருக்கும். எனவே, மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்  திருவள்ளூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை, தமிழ்நாடு அரசு குறைந்தபட்சம் ஒரு மாதம் நீட்டித்துத் தரவேண்டும் என்ற கோரிக்கைகளை பலரும் எழுப்பியுள்ளனர்.

அதில், முன்னாள் முதலமைச்சர் திரு ஓ.பன்னீர் செல்வம் இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் தனது கோரிக்கையை பதிவு செய்துள்ளார்.

மக்களின் நிலைமை ஒரு புறம் என்றால், தமிழக மின் வாரியத்தின் கடன் சுமை இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள சாத்தியக்கூறுகளைப் பற்றி யோசிக்க வைக்கிறது.

மேலும் படிக்க | புத்தாண்டில் அதிர்ச்சி! மின் கட்டணம் 25% வரை அதிகரிக்கிறது! அதிர்ச்சியில் மக்கள்

ஏற்கனவே ரூ.1.75 லட்சம் கோடி கடனில் இருப்பதால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று தெரிவித்து, சில மாதங்களுக்கு முன்னதாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம், குடிசை, விசைத்தறி, கைத்தறி, விவசாயம் மற்றும் வழிப்பாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென எழுந்துள்ள மழை வெள்ள பாதிப்பும், அதைத் தொடரும் மக்களின் பிரச்சனைகளும் எதிரொலிக்கும் கோரிக்கைகளும்  மின்சார வாரியத்திற்கு சுமையாக இருக்கும் என்றாலும், மக்கள் உரிய நேரத்தில் மின்கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில். "மனிதாபிமான அடிப்படையில்" பணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவதை தமிழ்நாடு அரசு புறக்கணித்துவிட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

அதே வேளையில், தொழில்ரீதியாக பார்த்தால், இதுபோன்ற விலக்குகள் ஏற்படுத்தும் நிதிச்சுமை மின்சார வாரியத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும் EPFO! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News