சில ஆயிரம் முதலீடு-லட்சக்கணக்கில் லாபம்! ‘இந்த’ தொழில் செய்து பாருங்கள்..

இந்தியாவை பொறுத்த வரை, அதன் வியாபார நோக்குகளை அறிந்து கொண்டுதான் ஒரு தொழிலை ஆரம்பிக்க முடியும்.   

Written by - Yuvashree | Last Updated : Feb 4, 2024, 04:50 PM IST
  • இந்தியாவில் சிறுகுறு தொழில் தொடங்க ஐடியா..
  • இதற்கு சில ஆயிரங்கள் தேவைப்படும்..
  • இதன் மூலம் கிடைக்கும் லாபம் எவ்வளவு?
சில ஆயிரம் முதலீடு-லட்சக்கணக்கில் லாபம்! ‘இந்த’ தொழில் செய்து பாருங்கள்.. title=

இந்தியாவையும், அதன் கலாச்சாரத்துடன் ஒன்றிய தேநீரை தவிர்க்கவே முடியாது. ஐடி துறையில் இருப்பவர்கள் கூட தங்களது வேலையை விட்டு விட்டு சிறு குறு தொழில்களை ஆரம்பிக்க தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக, டீக்கடையை ஆரம்பித்து அதில் லாபம் பார்ப்பதில் பல இளைஞர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட இந்த டீக்கடை தொழிலை ஆரம்பிப்பதற்கு எவ்வளவு தேவைப்படும்? இதை எப்படி ஆரம்பிப்பது? 

டீக்கடையை ஆரம்பிக்க எவ்வளவு செலவாகும்?

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தேநீர் என்பது எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் மிகவும் விரும்பப்படும் வணிகமாக உள்ளது. ஒரு சிறிய டீ ஸ்டால் தொழிலைத் தொடங்குவது மிகவும் லாபம் தரும் வணிகம் என கூறப்படுகிறது. ஒருவரின் முதலீட்டுத் திறனைப் பொறுத்து, அவர் ஆரம்பிக்கும் கடையை எந்த அளவிலும், எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் அமைக்கலாம். 

சீனாவை தாண்டி, இந்தியாவில்தான் அதிக தேயிலை விற்பனை செய்யப்படுகிறது. சிறு குரு நகரங்கள் என அனைத்து இடங்களிலும் இந்த தேநீர் தொழில் மூலம் நன்றாக லாபம் பார்க்கலாம். பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெறுவதற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கும் பெண்களுக்கு, டீக்கடை வணிகம் ஒரு சிறந்த தொழிலாகும். 

தேநீர் வகைகள்:

>சாதாரண டீ
>மசாலா டீ
>ப்ளாக்டீ
>கிரீன் டீ

தேநீர் தொழிலிற்கான திட்டம்:

ஒருவரின் முதலீட்டுத் திறனைப் பொறுத்து, சரியான வணிக திட்டத்தை உருவாக்க வேண்டும். அந்த திட்டத்தை பொறுத்து, ஒரு சிறிய டீ ஸ்டால் அமைக்கலாம். இதனுடன் ஸ்நாக்ஸையும் சேர்த்து விற்பனை செய்யலாம். ஒரு கப் தேநீர் பொதுவாக 5 முதல் 10 ரூபாய் வரை இருக்கலாம். டீ ஸ்டால்களில் டீயுடன் பிரட் டோஸ்ட், நூடுல்ஸ், ஆம்லெட் போன்ற பிற ஸ்நாக்ஸ் பொருட்களை விற்கலாம். ஒரு சிறிய அளவில் இது போன்ற கடையை ஆரம்பிக்க, ரூ.50 ஆயிரம் வரை ஆகலாம்.  நீங்கள் உருவாக்கும் திட்டத்தை பொறுத்து, இந்த முதலீடு அதிகரிக்கலாம் அல்லது குறையவும் செய்யலாம். இந்த லாபம் சில ஆண்டுகளில் லட்சக்கணக்கிலும் மாறலாம். 

டீ பிராண்டிற்கான உரிமை:

ஏற்கனவே நன்கு பிரபலமாகியிருக்கும், நிறுவனத்தின் Franchise ஆரம்பிக்கலாம். ஏற்கனவே நிறைய வாடிக்கையாளர்களுடன் இருக்கும் நிறுவனத்துடன் டை-அப் வைத்துக்கொள்ளவது நல்ல முடிவாகும். ஆனாலும், இதை தனியாக ஆரம்பித்து, அந்த தொழில் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும். ஆனால், இதில் நிதி ஆபத்து அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம்! ‘இந்த’ வியாபாரத்தை செய்து பாருங்கள்!

டீக்கடையினால் வரும் லாபம்:

இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னர், இதிலிருந்து எவ்வளவு லாபம் வரும் என்பதையும் கணக்கிட்டுக்கொள்வது நல்லது. முதலீட்டை பொறுத்து லாபம் அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிக முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படும் தொழிலில் குறைவான லாபம் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

எங்கு ஆரம்பிக்க வேண்டும்?

தேநீர் கடையை ஆரம்பிக்கும் போது அதை எங்கு ஆரம்பிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை காலை முதல் மாலை வரை பலர் தேநீர் அருந்துகின்றனர். வணிக இடங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் சென்டர்கள், சந்தைகள் மற்றும் கல்லூரிகள் போன்ற டீ ஸ்டால் தொடங்க சிறந்த இடங்களாகும்.  தேநீர் கெட்டுப்போகும் பொருளாகும். மக்கள் அதை சூடாக இருக்கும் போது மற்றும் பயணத்தின் போது சாப்பிட விரும்புகிறார்கள். எனவே, மக்கள் கூட்டம் இல்லாத இடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள இடத்தில் இதை நடத்த முடியாது. இதனால், நாள்தோறும் அதிக கூட்டம் கூடும் இடத்தை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும்.

ஆன்லைன்:

தேயிலை வியாபாரத்தை ஊக்குவிக்கும் இணையதளங்கள் நிறைய உள்ளன. தரமான தளம் மூலம் இதை உருவாக்கலாம். இதனால் மேலும் தேநீர் விற்பனையை அதிகரிக்க முடியும். வரவிருக்கும் வாடிக்கையாளர்களிடையே உங்களின் பிராண்ட்டின் நற்பெயரைக் எழுப்ப உதவும். டீ ஸ்டால் பற்றிய விளம்பரத்தை பரப்புவதற்கு சமூக ஊடக வலைத்தளங்களை சரியாகப் பயன்படுத்தினால், அது அதிக வாடிக்கையாளர்களை சேகரிக்க உதவும்.

மேலும் படிக்க | குறைந்தபட்ச இருப்புத்தொகை: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News