Amazon Small Business Day Sale 2020: discount எவ்வளவு? எப்போது?

அமேசான் சில்லறை விற்பனை நாள் என்று எனத் தெரியுமா? எப்போது? எவ்வளவு தள்ளுபடி, சலுகை என்ன என்பதை தெரிந்துக் கொள்ளவேண்டுமா? வாடிக்கையாளர்கள் பொருடகளை வாங்க ஊக்குவிக்கும் வகையிலும், தொழில்முனைவோருக்கு உதவும் வகையிலும், அமேசான் தனது அமேசான் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பேமெண்டில் (digital payments) 10 சதவீத கேஷ்பேக் சலுகையை (cashback offer) வழங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 7, 2020, 09:14 PM IST
  • அமேசான் விற்பனை நான்காவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • அட்டகாசமான சலுகைகள்
  • பலவிதமான பொருட்கள்
Amazon Small Business Day Sale 2020: discount எவ்வளவு? எப்போது? title=

அமேசான் சில்லறை விற்பனை நாள் என்று எனத் தெரியுமா? எப்போது? எவ்வளவு தள்ளுபடி, சலுகை என்ன என்பதை தெரிந்துக் கொள்ளவேண்டுமா? வாடிக்கையாளர்கள் பொருடகளை வாங்க ஊக்குவிக்கும் வகையிலும், தொழில்முனைவோருக்கு உதவும் வகையிலும், அமேசான் தனது அமேசான் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பேமெண்டில் (digital payments) 10 சதவீத கேஷ்பேக் சலுகையை (cashback offer) வழங்குகிறது.

ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியா தனது சிறு வணிக நாள் (Small Business Day) விற்பனையை அறிவித்துள்ளது. அமேசான் 2020 ஆண்டில் தனது சிறு வணிக தினத்தை நான்காவது முறையாக டிசம்பர் 12 ஆம் தேதி நடத்தும் என்று உறுதிப் படுத்தியுள்ளது. 

டிசம்பர் 12 நள்ளிரவு முதல் அதே நாளில் இரவு 11:59 மணி வரை இந்த சலுகை விற்பனைத் தொடங்கும். இந்த அமேசான் விற்பனையில், start-up நிறுவனங்கள், பெண்கள் தொழில்முனைவோர், கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் மற்றும் உள்ளூர் கடைகளில் பிரத்யேகமாக கிடைக்கும் பொருட்களை வாங்கலாம். இந்த ஆன்லைன் விற்பனையில், சிறு வணிகங்கள் தங்கள் வியாபாரத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். 

Read Also | Airtel, BSNL, Jio மற்றும் Vi இன் 28 நாட்கள் செல்லுபடியாகும் சூப்பர் திட்டங்கள்!

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இந்த தள்ளுபடி விற்பனை நடக்கிறது. இந்த நிகழ்வு நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும், வீட்டு அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பிரிவுகளில் பொருட்களை இந்த விற்பனையில் வாங்கலாம். சுவர் அலங்காரப் பொருட்கள் கலைப் பொருட்கள் மற்றும் சத்தீஸ்கரின் சிறப்பு கைவினை பொருட்கள், போன்ற சூழலுக்கு உகந்த பொருட்கள்; சமையலறைப் பொருட்கள்; விளையாட்டு பொருட்கள் என பலவிதமான பொருட்கள் கிடைக்கின்றன. 

வரவிருக்கும் சிறு வணிக தினத்தில், அமேசான் (Amazon) இந்தியா SMB விற்பனையாளர்கள் மற்றும் B2B விற்பனையாளர்கள், தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற பொருட்களை அதிக அளவில் விற்பார்கள். 

கொரோனா நோய்த்தொற்றினால் உலக அளவில் பொருளாதாரம் மந்தமாகியிருக்கும் நிலையில் தொழில் முனைவோருக்கும், வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கும் இந்த விற்பனை.   

சலுகைகள் (OFFERS)

வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க, அமேசான் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பேமெண்ட்களில் (digital payments) 10 சதவீத கேஷ்பேக் (cashback) சலுகையை வழங்கும். கூடுதலாக, அமேசான் ஐசிஐசிஐ (ICICI) வங்கியுடன் கடன் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்கியுள்ளது.

அமேசான் பிசினஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் பிரத்தியேக வணிக வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகித கேஷ்பேக் மற்றும் ஜிஎஸ்டி உள்ளீட்டு வரிவிலக்கு, மொத்த தள்ளுபடிகள் மற்றும் பிரிண்டர்கள், மடிக்கணினிகள், உபகரணங்கள் என பல பொருட்களுக்கு ஆஃபரை அள்ளி வழங்கியிருக்கிறது. இது வணிகத்தை ஊக்குவிக்கும்.  

Also Read | MONEY DOUBLE SCHEME: இந்த திட்டத்தில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கவும்!

"2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதிலும் உள்ள வணிகங்களுக்கும் குறிப்பாக சிறு வணிகங்களுக்கும் இதுவரை இல்லாத புதுவிதமான சவால்கள் ஏற்பட்டுள்ளன. அமேசானில், கடந்த 7 மாதங்களில் பல்வேறு விற்பனை நிகழ்வுகள் மூலம் கட்டமைக்கப்பட்ட விற்பனையின் வேகத்தைத் தொடரவும், எங்கள் 7 லட்சம் விற்பனையாளர்களுக்கு பயனளிக்கும் வகையிலும் இந்த சலுகை விற்பனையை அறிவிக்கிறோம்" என்று அமேசான் இந்தியா துணைத் தலைவர் மணீஷ் திவாரி கூறினார்.

UN MSME Day தினத்தை முன்னிட்டு, 2020 ஜூன் 27, அன்று நடைபெற்ற சிறு வணிக நாளில் 45,000 விற்பனையாளர்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தன. அதுமட்டுமல்ல, 2,600 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களின் விற்பனை அபரிதமாக இருந்தது.  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News