SBI அளிக்கும் சூப்பர் வாய்ப்பு: இந்த ஆவணங்களை சமர்ப்பித்து மாதம் ரூ. 60,000 சம்பாதிக்கலாம்

வீட்டில் இருந்தபடியே மாதம் 60,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு சிறந்த வணிக யோசனையைப் பற்றி இந்த பதிவில் காணலாம். மிக முக்கியமாக, இது ஒரு பாதுகாப்பான முறையாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 12, 2022, 04:00 PM IST
  • எஸ்பிஐ ஏடிஎம் உரிமையை (SBI ATM Franchise) எடுத்து நீங்கள் எளிதாக சம்பாதிக்கலாம்.
  • எஸ்பிஐ ஏடிஎம் உரிமத்தை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • முதலீட்டின் மீதான வருமானம் ஆண்டு அடிப்படையில் 33-50 சதவீதம் வரை கிடைக்கும்.
SBI அளிக்கும் சூப்பர் வாய்ப்பு: இந்த ஆவணங்களை சமர்ப்பித்து மாதம் ரூ. 60,000 சம்பாதிக்கலாம் title=

கொரோனா காலத்தில் நீங்கள் வீட்டில் அமர்ந்து பணம் சம்பாதிக்க விரும்பினால், உங்களுக்காக ஒரு சிறந்த வழி உள்ளது. வீட்டில் இருந்தபடியே மாதம் 60,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு சிறந்த வணிக யோசனையைப் பற்றி இந்த பதிவில் காணலாம். மிக முக்கியமாக, இது ஒரு பாதுகாப்பான முறையாகும். 

இந்த வாய்ப்பை நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) உங்களுக்கு வழங்குகிறது.

SBI ATM Franchise

பாரத ஸ்டேட் வங்கியின் எஸ்பிஐ ஏடிஎம் உரிமையை (SBI ATM Franchise) எடுத்து நீங்கள் எளிதாக சம்பாதிக்கலாம். எந்த வங்கியின் ஏடிஎம்-மும் வங்கி சார்பில் நிறுவப்பவதில்லை. அதற்கென தனி நிறுவனம் உள்ளது. அதன் ஒப்பந்தம் வங்கியால் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனம் அனைத்து இடங்களிலும் ஏடிஎம்களை நிறுவ வேலை செய்கிறது. ஏடிஎம் உரிமையைப் பெற்று நீங்கள் எவ்வாறு பணம் ஈட்டுவது என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

SBI ATM Franchise: உரிமையைப் பெறுவதற்கான நிபந்தனைகள் இவை

1. எஸ்பிஐ ஏடிஎம்-ன் உரிமையைப் பெற, உங்களிடம் 50-80 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.
2. மற்ற ஏடிஎம்களில் இருந்து அதன் தூரம் 100 மீட்டர் இருக்க வேண்டும்.
3. இந்த இடம் தரைத்தளத்திலும், நல்ல தெரிவுநிலையிலும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
4. இங்கு 24 மணி நேரமும் மின்சாரம் இருக்க வேண்டும், இது தவிர, 1 கிலோவாட் மின் இணைப்பும் கட்டாயம்.
5. இந்த ATM ஒரு நாளைக்கு சுமார் 300 பரிவர்த்தனைகள் செய்யும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
6. ஏடிஎம் இடத்தில் கான்கிரீட் கூரை இருக்க வேண்டும்.
7. V-SAT ஐ நிறுவுவதற்கு சங்கம் அல்லது அதிகாரத்திடம் இருந்து ஆட்சேபனை சான்றிதழ் தேவையில்லை.

SBI ATM Franchise: உரிமைக்கு தேவையான ஆவணங்கள்
1. அடையாளச் சான்று - ஆதார் அட்டை (Aadhaar Card ), பான் கார்டு, வாக்காளர் அட்டை
2. முகவரிச் சான்று - ரேஷன் கார்டு, மின்சார பில்
3. வங்கி கணக்கு மற்றும் பாஸ்புக்
4. புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண்.
5. பிற ஆவணங்கள்
6. ஜிஎஸ்டி எண்
7. நிதி ஆவணங்கள்

எஸ்பிஐ ஏடிஎம் உரிமைக்கு எப்படி விண்ணப்பிப்பது

எஸ்பிஐ ஏடிஎம் (SBI ATM) உரிமத்தை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Tata Indicash, Muthoot ATM மற்றும் India One ATM ஆகியவை இந்தியாவில் ஏடிஎம்களை நிறுவ ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன. இந்த அனைத்து நிறுவனங்களின் இணையதளங்களிலும் ஆன்லைனில் லாக் இன் செய்து உங்கள் ஏடிஎம்-க்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

ALSO READ | SBI Alert: இந்த தேதி முதல் IMPS பரிவர்த்தனைக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் 

அதிகாரப்பூர்வ இணையதளம் இதோ

டாடா இண்டிகேஷ் - www.indicash.co.in
முத்தூட் ஏடிஎம் - www.muthootatm.com/suggest-atm.html
இந்தியா ஒன் ஏடிஎம் - india1atm.in/rent-your-space

எவ்வளவு தொகை ஈட்ட முடியும்

இந்த நிறுவனங்களில், டாடா இண்டிகேஷ் மிகப்பெரிய மற்றும் பழமையான நிறுவனமாகும். இது ஃபிரான்சைஸிகளுக்கு 2 லட்சம் பாதுகாப்பு வைப்புத் தொகையை வழங்குகிறது. இது தவிர, நீங்கள் ரூ.3 லட்சத்தை செயல்பாட்டு மூலதனமாக டெபாசிட் செய்ய வேண்டும். இந்த வழியில், நீங்கள் இதில் மொத்தம் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்வீர்கள். 

இதில் வருமானத்தைப் பார்த்தால், ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் 8 ரூபாயும், பணமில்லா பரிவர்த்தனைக்கு 2 ரூபாயும் கிடைக்கும். அதாவது, முதலீட்டின் மீதான வருமானம் ஆண்டு அடிப்படையில் 33-50 சதவீதம் வரை கிடைக்கும். 

இதை இந்த வகையில் புரிந்து கொள்ளலாம்: உங்கள் ஏடிஎம் மூலம் தினமும் 250 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டால், அதில் 65 சதவீதம் பணப் பரிவர்த்தனை மற்றும் 35 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனையாக இருந்தால் உங்கள் மாத வருமானம் 45 ஆயிரம் ரூபாய்க்கு அருகில் இருக்கும். அதே நேரத்தில், 500 பரிவர்த்தனைகளில் சுமார் 88-90 ஆயிரம் கமிஷன் இருக்கும். அதாவது, ஒருமுறை முதலீடு செய்த பிறகு, அபரிமிதமான லாபம் கிடைக்கும் என்பது உறுதி.

ALSO READ | வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் பயன்களை வழங்கும் SBI வங்கியின் 3-in-1 வசதி! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News