யோகிபாபு மற்றும் செந்தில் நடிக்கும் குழந்தைகள் முன்னேற்றக் கழகம்!

Kulanthaigal Munnetra Kazhagam: குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Jan 19, 2025, 08:00 PM IST
  • ஒரே படத்தில் யோகிபாபு, செந்தில்.
  • மறைந்த இயக்குநர் ஷங்கர் தயாள் இயக்கி உள்ளார்.
  • வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.
யோகிபாபு மற்றும் செந்தில் நடிக்கும் குழந்தைகள் முன்னேற்றக் கழகம்!  title=

மறைந்த இயக்குநர் ஷங்கர் தயாள். N இயக்கத்தில் உருவாகி இருக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்” வரும் ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. மீனாக்ஷி அம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் தயாள்.N இயக்கத்தில், குழந்தை நட்சத்திரங்களுடன் யோகிபாபு மற்றும் செந்தில் இணைந்து நடிக்க,  கலக்கலான பொலிடிகல் காமெடியாக  உருவாகியுள்ள திரைப்படம் "குழந்தைகள் முன்னேற்றக் கழகம்". இப்படம் வரும் 2025 ஜனவரி 24 ஆம் தேதி, உலகமெங்கும் திரைக்கு வருகிறது.

மேலும் படிக்க | ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் - பா ரஞ்சித் ஆவேசம்!

இயக்குநர் ஷங்கர் தயாள்

சமீபத்தில் மறைந்த, சகுனி படப்புகழ் இயக்குநர் ஷங்கர் தயாள். N குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, செந்தில் மற்றும் யோகிபாபு நடிப்பில், இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இப்படம் திரைக்கு கொண்டு வரப்படுகிறது. திரையுலகில் குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து இதுவரை உருவான படங்கள் யாவும், பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்லும் படமாகவும், ஃபேன்டஸி, காமெடி, ஹாரர் என பொதுவான ஜானரில் மட்டுமே வந்துள்ளது. முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் பார்வையைச் சொல்லும் பொலிடிகல் காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

நீ என்னவாக ஆசைப்படுகிறாய் எனும் கேள்விக்கு, அரசியல்வாதியாக ஆசைப்படுகிறேன் எனும் ஒரு பள்ளி  மாணவனின் பதிலும், அதைத்தொடர்ந்த நிகழ்வுகளும் தான் இப்படத்தின் மையம். குழந்தைகளின் உலகின் வழியே, அரசியலை அணுகும் இப்படம், ஒரு மாறுபட்ட அனுபவம் தரும் படைப்பாக இருக்கும். இப்படத்தின் முதன்மை பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்களான, இமயவர்மன் மற்றும் இயக்குநர் ஷங்கர் தயாள் அவர்களின் மகன் அத்வைத், ‘அன்டே சுந்தரனிகி’ படப்புகழ்  ஹரிகா படேடா, மாஸ்டர் பவாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் படத்தின் திருப்புமுனை பாத்திரத்தில் செந்தில் மற்றும் யோகிபாபு நடித்துள்ளனர். முக்கிய பாத்திரங்களில் பருத்திவீரன் சரவணன், சுப்பு பஞ்சு, லிஸி ஆண்டனி, பிராங்க்ஸ்டர் ராகுல், அர்ஜுனன், பிச்சைக்காரன் படப்புகழ் இயக்குநர் மூர்த்தி, சித்ரா லக்ஷ்மன், மயில்சாமி, வையாபுரி, கம்பம் மீனா, கும்கி அஸ்வின், அஷ்மிதா சிங், வைகா ரோஸ், சோனியா போஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மீனாக்ஷி அம்மன் மூவிஸ் சார்பில் அருண்குமார் சம்பந்தம் மற்றும்  இயக்குநர் ஷங்கர் தயாள் .N பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் நடத்தி முடிக்கப்பட்டது. பண்டிகைக்  கொண்டாட்டமாக இப்படம் வரும் 2025 ஜனவரி 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில் நுட்ப குழு விபரம்  

எழுத்து இயக்கம் - ஷங்கர் தயாள் N
ஒளிப்பதிவு -  J .லக்ஷ்மன் MFI
எடிட்டர் - A.ரிச்சர்ட் கெவின்
இசையமைப்பாளர் -  "சாதக பறவைகள்" சங்கர்
கலை இயக்குனர் - C.K  முஜிபுர் ரஹ்மான்
நிர்வாகத் தயாரிப்பாளர்கள் - பாண்டியன் நன்மாறன், E.சூர்யபிராகாஷ்
தயாரிப்பு நிர்வாகம் - ராஜாராமன்,M V ரமேஷ்

மேலும் படிக்க | ஓடிடியில் இன்று வெளியான விடுதலை 2!! எந்த தளம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News