EPF Account: அலுவலக பணியில் இருக்கும் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுவதை கவனித்து இருப்பீர்கள். பணியில் சேரும்போது அனைவரும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பின் படிவங்களையும் பூர்த்து செய்து கொடுத்திருப்பீர்கள். உங்கள் மாதச் சம்பளத்தில் இருந்து, EPFO ஆல் நடத்தப்படும் திட்டமான EPF -க்கு (பணியாளர் வருங்கால வைப்பு நிதி) பணம் செல்கிறது. ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு, EPF இல் 12 சதவிகிதம் கழிப்புடன் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய கார்பஸ் உருவாக்கப்படுகின்றது. ஓய்வூதிய நிதியை உருவாக்குவதைத் தவிர, EPF இன்னும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த நன்மைகளை பற்றி பெரும்பாலும் அனைத்து ஊழியர்களுக்கும் தெரிந்திருக்கும். எனினும், ஊழியர்கள் அதிக கவனம் செலுத்தாத அல்லது அறியாத சில விஷயங்களும் இதில் உள்ளன. EPF இன் அத்தகைய 7 அம்சங்கள் அல்லது நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
1. ஓய்வூதிய பலன் (Pension)
வருங்கால வைப்பு நிதியின் கீழ், உங்கள் பணம் இரண்டு பகுதிகளாக டெபாசிட் செய்யப்படுகிறது. ஒன்று EPF அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி, மற்றொன்று EPS அதாவது ஊழியர் ஓய்வூதியத் திட்டம். உங்கள் சம்பளத்தில் கழிக்கப்படும் 12 சதவீதம் உங்கள் நிறுவனத்தால் செலுத்தப்படுகிறது. ஓய்வூதிய கார்பஸ் நிறுவனத்தின் பங்களிப்பிலிருந்து உருவாக்கப்படுகின்றது. இருப்பினும், ஓய்வூதியத்திற்கான தகுதியானது 58 வயதிற்குப் பிறகுதான் தொடங்குகிறது. மேலும் இதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை 1,000 ரூபாய் ஆகும்.
2. நாமினேஷன் செய்வதன் பலன்
சமீப காலங்களில், சந்தாதாரர்களை இந்த வசதிக்காக நாமினேஷனை பரிந்துரைக்குமாறு EPFO பலமுறை கேட்டுக் கொண்டுள்ளது. உங்கள் EPF கணக்கிற்கு நீங்கள் யாரை வேண்டுமானாலும் நாமினி ஆக்கலாம். சந்தாதாரர் இறந்தால், நாமினிக்கு பிஎஃப் பணம் கிடைக்கும்.
3. VPF இல் முதலீடு செய்யவும்
EPF தவிர, தன்னார்வ வருங்கால வைப்பு நிதியிலும் அதாவது VPF -இலும் (Voluntary Provident Fund) ஊழியர்கள் முதலீடு செய்யலாம். VPF இல் உங்கள் அடிப்படை சம்பளத்தில் இருந்து கூடுதல் பங்களிப்பைச் செய்யலாம்.
4. பணம் எடுப்பதற்கான விதிகள்
EPF -இல் இருந்து பணம் எடுக்க பல விதிகள் உள்ளன. நீங்கள் உங்கள் வேலையை மாற்றினால், உங்கள் EPF கணக்கிலிருந்து எளிதாக பணத்தை எடுக்கலாம் என்று இல்லை. ஏற்கனவே செய்த வேலையிலிருந்து நின்ற பிறகு நீங்கள் இரண்டு மாதங்களுக்கு வேறு வேலை ஏதும் செய்யாமல் இருந்தால் மட்டுமே EPF பணத்தை எடுக்க முடியும். அதே போல் ஒரு புதிய வேலை கிடைத்தவுடன்தான் தொகையை மாற்ற முடியும்.
மேலும் படிக்க | அவசர பணம் தேவைக்கு PF கணக்கில் ஈஸியாக எடுக்கலாம் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
5. பகுதியளவு தொகையை பெறுதல்
இது தவிர, பகுதியளவு தொகையை எடுப்பதற்கு (EPF Withdrawal) அதற்கான தனித்துவமான விதிகள் உள்ளன. நீங்கள் முழுத் தொகையையும் திரும்பப் பெற முடியாது, ஆனால் கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை பணத்தை எடுக்கலாம். உங்களுக்காகவும், உங்கள் உடன்பிறந்தவர்களுக்காகவும், உங்கள் குழந்தைகளின் திருமணம் அல்லது கல்விக்காகவும் பணத்தை எடுக்கலாம். ஆனால் கணக்கைத் தொடங்கி 7 ஆண்டுகளுக்குப் பிறகு, 50 சதவீதத் தொகையை மட்டுமே திரும்பப் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இது தவிர உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் பெரிய அறுவை சிகிச்சை அல்லது பிற சிகிச்சைக்காகவும் பணம் எடுக்கலாம். வீட்டுக் கடனை அடைக்க, வீடு கட்ட அல்லது வாங்க, அல்லது வீட்டைப் புதுப்பிக்கவும் பணம் எடுக்கலாம்.
6. EPF மீதான வட்டி
நீங்கள் EPF இல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகையை வட்டியாகப் பெறுவீர்கள். இது தொடர்ந்து அதிகரித்து வரும். தற்போது அரசாங்கம் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு 8.15% என்ற விகிதத்தில் EPF-க்கான வருடாந்திர வட்டியை வழங்குகிறது. ஆனால் EPS கார்பஸில் எந்த வருமானமும் கிடைக்காது. இதில் நீங்கள் டெபாசிட் செய்யும் நிதியின் அளவு மட்டுமே கிடைக்கும்.
7. ஆயுள் காப்பீடு
ஒரு நிறுவனத்தில் ஆயுள் காப்பீட்டுப் பலன் இல்லை என்றால், அதன் ஊழியர்களுக்கு EDLI (ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு) திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீடு வழங்கப்படலாம். இருப்பினும், இதில் மிகக் குறைவான கவரேஜ் உள்ளது.
மேலும் படிக்க | EPFO Update: பணிஓய்வுக்கு முன்னரே பிஎஃப் தொகையை எடுக்க முடியுமா? எவ்வளவு எடுக்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ