EPFO அளித்த தீபாவளி பரிசு, குஷியில் பிஎஃப் சந்தாதாரர்கள்: உங்கள் கணக்கில் பணம் வந்துவிட்டதா?

EPFO Update: EPFO கணக்கில் 8.15% என்ற விகிதத்தில் வட்டி அளிக்கப்படுகின்றது. இந்த விகிதம் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அறங்காவலர் குழுவுடன் இணைந்து நிதி அமைச்சகத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 13, 2023, 10:06 AM IST
  • மாதா மாதம் இபிஎஃப் -இல் ஒரு குறிப்பிட்ட தொகையை பங்களிக்கும் நபரா நீங்கள்?
  • உங்களுக்கு ஒரு அட்டகாசமான செய்தி வந்துள்ளது.
  • பிஎஃப் கணக்கில் இருப்புத் தொகையை செக் செய்வது எப்படி?
EPFO அளித்த தீபாவளி பரிசு, குஷியில் பிஎஃப் சந்தாதாரர்கள்: உங்கள் கணக்கில் பணம் வந்துவிட்டதா? title=

EPFO Update: மாதா மாதம் இபிஎஃப் -இல் ஒரு குறிப்பிட்ட தொகையை பங்களிக்கும் நபரா நீங்கள்? அப்படி என்றால் உங்களுக்கு ஒரு அட்டகாசமான செய்தி வந்துள்ளது. பணியாளர் வருங்காக வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO), தனது சந்தாதாரர்களுக்கு தீபாவளி பரிசை அளித்துள்ளது. இபிஎஃப்ஓ ​​2022-23க்கான வட்டி விகிதங்களை சந்தாதாரர்களின் பிஎஃப் கணக்குகளில் வரவு வைக்கத் தொடங்கியுள்ளது. EPFO கணக்கில் 8.15% என்ற வட்டி விகிதத்தில் வட்டி அளிக்கப்படுகின்றது. இந்த விகிதம் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அறங்காவலர் குழுவுடன் இணைந்து நிதி அமைச்சகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில், ஜூன் மாதத்தில் அரசாங்கம் அதற்கான வட்டி விகிதங்களை அறிவித்தது.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டன

சமூக ஊடகங்களில், ஊழியர்கள் தங்கள் கணக்குகளுக்கு வட்டி எப்போது வரவு வைக்கப்படும் என இபிஎஃப்ஓ இடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தனர். இது குறித்து கூறிய இபிஎஃப்ஓ, வட்டியை வரவு வைப்பதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும், கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த ஆண்டிலேயே வட்டி பணம் கிடைக்கும் என்றும் தெரிவித்தது. விரைவில் கணக்கில் வட்டித் தொகை வந்து சேரும் என்றும், அதுவரை ஊழியர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் அமைப்பு தெரிவித்தது. 

பிஎஃப் கணக்கில் இருப்புத் தொகையை செக் செய்வது எப்படி?

பிஎஃப் (PF) உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் வட்டி தொகை வரவு வைக்கப்பட்டுவிட்டதா என்பதையும், கணக்கில் இருக்கும் இருப்புத் தொகையையும் செக் செய்ய எங்கும் அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே மிக எளிய வழியில் இதை தெரிந்துகொள்ளலாம். இதற்கான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான நற்செய்தி: 50% டிஏ, எக்கச்சக்க ஊதிய உயர்வு

பிஎஃப் கணக்கு இருப்பை செக் செய்வது எப்படி?

உங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) எவ்வளவு தொகை வந்துள்ளது என்பதை சரிபார்க்க நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே இதை செய்யலாம். பின்வரும் வழிகளில் பிஎஃப் கணக்கு இருப்பை செக் செய்யலாம். 

1. உமங் செயலி:

EPF கணக்கில் அரசாங்கம் எவ்வளவு தொகையை செபாசிட் செய்துள்ளது என்பதை அறிய நீங்கள் எங்கும் அலைய வேண்டியது இல்லை. பிஎஃப் சந்தாதாரர்கள் உமங் செயலியை விரைவில் பதிவிறக்கம் செய்து, வீட்டில் இருந்தபடியே தங்கள் கணக்கில் உள்ள தொகையை (EPF Balance) சரிபார்க்கலாம். 

2. இபிஎஃப்ஓ இணையதளம்

EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் ( epfindia.gov.in) சென்றும் உங்கள் கணக்கில் உள்ள தொகையை பற்றி தெரிந்துகொள்ளலாம். 

3.மிஸ்ட் கால்

மிஸ்டு கால் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண்ணை இபிஎஃப்ஓ -வில் பதிவு செய்ய வேண்டும். பிஎஃப் சந்தாதாரர் மிஸ்டு கால் மூலம் இருப்புத் தகவலைப் பெற பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, உங்கள் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் கணக்குத் தகவல் வரும்.

4. எஸ்எம்எஸ் 

எஸ்எம்எஸ் மூலம் பிஎஃப் இருப்பை அறிய, இபிஎஃப்ஓ -இல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இதற்கு, EPFO UAN LAN என்று டைப் செய்ய வேண்டும். இங்கு LAN என்றால் மொழி என்று பொருள். 

இந்தியாவில் இபிஎஃப் ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக உள்ளது. இது ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்குகிறது. 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் இரட்டை மகிழ்ச்சி: கணக்கில் வரும் கூடுதல் தொகை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News