EPFO உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: முக்கிய விதிகளில் மாற்றம்

EPFO New Rules: இப்போது சந்தாதாரர்கள் அல்லது அறக்கட்டளைகள் கணக்கைச் சரிபார்க்க 14 நாட்கள் கூடுதல் நேரம் கிடைக்கும் என EPFO வழங்கிய SOP இல் தெர்விக்கப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 9, 2024, 03:00 PM IST
  • EPFO Verification -க்கு அதிக நேரம் கிடைக்கும்.
  • EPFO ​​Accounts Freeze என்றால் என்ன?
  • EPFO ​​Accounts DeFreeze என்றால் என்ன?
EPFO உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி: முக்கிய விதிகளில் மாற்றம் title=

EPFO New Rules: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் நிர்வகிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி, பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. இபிஎஃப்ஓ ​​தனது உறுப்பினர்களின் நன்மைகளை மேம்படுத்தவும், வசதிகளை மேம்படுத்தவும் அவ்வப்போது பல வித மாற்றங்களை செய்கிறது. இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) இவற்றை பற்றிய புதுப்பித்தல்களை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். 

சமீபத்தில், EPFO அதன் அனைத்து சந்தாதாரர்களுக்கும் ஒரு நிலையான இயக்க நடைமுறையை (SOP) தயாரித்துள்ளது. இந்த OSOP, UAN ஐ முடக்கவும், முடக்கத்தை நீக்கவும், அதாவது, ஃப்ரீஸ் மற்றும் டீஃப்ரீஸ் செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக EPFO ​​ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 

EPFO சுற்றறிக்கை

இப்போது சந்தாதாரர்கள் அல்லது அறக்கட்டளைகள் கணக்கைச் சரிபார்க்க 14 நாட்கள் கூடுதல் நேரம் கிடைக்கும் என EPFO வழங்கிய SOP இல் தெர்விக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எஸ்ஓபி -இன் கீழ், போலி பரிவர்த்தனைகள் அல்லது மோசடி நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள இபிஎஃப் கணக்குகளில் (EPF Accounts) சரிபார்ப்பு செயல்முறை மேற்கொள்ளப்படும். 

இந்தச் செயல்பாட்டின் கீழ், அகவுண்ட் MID, UAN மற்றும் நிறுவனங்களுக்கான சரிபார்ப்பின் பல வழிமுறைகள் உள்ளன. இந்த சரிபார்ப்பின் மூலமாக, EPF கணக்கில் உள்ள தொகை பாதுகாப்பானதா இல்லையா என்பது உறுதி செய்யப்படும். இது பாதுகாப்பு செயல்முறையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். 

EPFO Verification -க்கு அதிக நேரம் கிடைக்கும்

இப்போது சந்தாதாரர்களும் அறக்கட்டளைகளும் கணக்கு சரிபார்ப்புக்கு (Account Verification) 30 நாட்களில் இருந்து 14 நாட்கள் கூடுதலாகப் பெறுவார்கள் என EPFO வழங்கிய தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முன்பு 30 நாட்கள் சரிபார்ப்புக்கு வழங்கப்பட்ட நிலையில், இப்போது மேலும் 14 நாட்களுக்கு இந்த அவகாசம் நீட்டிக்கப்படக்கூடும்.

மேலும் படிக்க | பட்ஜெட்டில் இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை: அரசின் மிகப்பெரிய நல்ல செய்தி

EPFO ​​Accounts Freeze என்றால் என்ன?

EPF கணக்குகளை முடக்குவது, அதாவது EPF கணக்குகளை ஃப்ரீஸ் செய்வது என்பது கணக்கின் வகைகளை செயலிழக்கச் செய்வது என EPFO தெரிவிக்கின்றது. எளிமையான வார்த்தைகளில் கூற வேண்டுமானால், இந்த செயல்முறை EPF கணக்கின் சில வசதிகளை செயலிழக்கச் செய்யும். EPF கணக்குகள் முடக்கப்பட்டால், பின்வரும் வகைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். 

- ஒருங்கிணைந்த போர்ட்டலில் லாக் இன் செய்வது.
- புதிய UAN -இன் உருவாக்கம்
- உறுப்பினர் சுயவிவரம் (Member Profile) மற்றும் பணி வழங்குநர் DSC (Employer DSC) ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.
- அபெண்டிக்ஸ் E, VDR ஸ்பெஷல் அல்லது VDR டிரான்ஸ்ஃபர்-இன் மூலம் எம்ஐடி -இல் செய்யப்படும் டெபாசிட்கள்.
- க்ளெய்ம் தீர்புகள், நிதி பரிமாற்றம் மற்றும் வித்ட்ராயல்.
- PAN அல்லது GSTN மூலம் புதிய அறக்கட்டளையை பதிவு செய்தல்

EPFO ​​Accounts DeFreeze என்றால் என்ன?

EPFO முடக்க நீக்கம் அதாவது டீஃப்ரீஸ் சரிபார்ப்பின் போது கணக்கின் முடக்கத்தை நீக்குவது தொடர்பானது. இதிலும் பல வகைகள் உள்ளன. EPFO கணக்கை டீஃப்ரீஸ் செய்ய வெரிஃபிகேஷன் தேவைப்படும். டீஃப்ரீஸ் செயல்முறையில் உள்ள வகைகள் பற்றி இங்கே காணலாம்.

- Category-A: UAN அல்லது அறக்கட்டளைக்கு, தலைமை அலுவலகம் மூலம் அடையாளம் காணல் மற்றும் தொடர்பு ஆகியவை இதில் அடங்கும். 
- Category-B: ப்ரொஃபைல் அல்லது KYC இல் செய்யப்படும் மாற்றங்கள் இதில் அடங்கும்.
- Category-C: இதை அபெண்டிக்ஸ் E, VDR ஸ்பெஷல், ஸ்பெஷல் 10D, VDR Transfer-in பொன்றவற்றின் மூலம் சப்மிட் செய்யலாம். UAN அதிகாரத்தின் அனுமதியின்றி இதை செய்ய முடியும். 

இபிஎஃப்ஓ ஃப்ரீஸ், டீஃப்ரீஸ் செயல்முறையை போல, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது செயல்பாடுகள் மற்றும் விதிகளில் செய்யும் மாற்றங்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் புதுப்பித்துக்கொள்வது அவசியமாகும்.  

மேலும் படிக்க | Budget 2024: மத்திய அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. நிறைவேறினால் ஜாக்பாட்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News