திறந்தவெளி சந்தை விற்பனை திட்டம்: பல மாநிலங்களுக்கு அரிசி மற்றும் கோதுமை விற்பனை செய்வது சில காலத்திற்கு முன்பு மத்திய மோடி அரசால் திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS) கீழ் நிறுத்தப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்களை வழங்கும் மாநிலங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது. உண்மையில், அரசின் இந்த முடிவுக்குப் பிறகு, மத்திய இருப்பிலிருந்து கோதுமை மற்றும் அரிசியைப் பெறுவதை மாநிலங்கள் நிறுத்திவிட்டன. இப்போது, முதல் சுற்று மின்-ஏலத்தில் சிறு வியாபாரிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைக்காததால், திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படலாம். ஏனெனில் தற்போது அரிசி விற்பனைக்காக நடத்தப்பட்ட முதல் மின்னணு ஏலத்துக்கு அரசிடம் மந்தமான வரவேற்பு கிடைத்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.
கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது
அரிசிக்கான திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தில் மாநிலங்கள் பங்கேற்க அனுமதிக்க மறுத்த மத்திய உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா, அடுத்த கட்டத்தை முடிவு செய்வதற்கு முன், மின்னணு ஏலச் சுற்றுகள் எப்படி இருக்கும் என்பதை மத்திய அரசு பார்க்கலாம் என்றார். திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் அரிசி கிடைப்பது தொடர்பாக காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் மத்திய பஃபர் ஸ்டாக்கில் இருந்து அரிசி கேட்க ஆரம்பித்தால், தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு இருப்பு இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான அசத்தல் சேமிப்பு திட்டம்: வட்டியிலேயே ஜாக்பாட் வருமானம்
திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டம் பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியது
தமிழகம், ஒடிசா உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசின் உணவு இருப்புகளை நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுகின்றன என்று சோப்ரா கூறினார். அது எந்த ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கும், குறிப்பிட்ட சமூகத்திற்கும் இருக்கக் கூடாது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அரிசிக்கான திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், சில்லறை சந்தையில் ஏற்படும் விலை உயர்வுக்கு எதிராக சந்தைக்கு சமிக்ஞை காட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உணவுத்துறை செயலாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் மாநிலங்களுக்கு அரிசி விற்பனையை மத்திய அரசு மீண்டும் தொடங்கினால், இலவச ரேஷன் எடுக்கும் குடும்பங்கள் அதன் நேரடி பலனைப் பெறுவார்கள்.
ஜூலை 5ஆம் தேதி முதல் மின் ஏலம் நடைபெற்றது
திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் அரிசி விற்பனைக்காக ஜூலை 5 ஆம் தேதி நடைபெற்ற முதல் மின்னணு ஏலத்தில், இந்திய உணவுக் கழகம் 3.88 லட்சம் டன் அரிசியை வழங்கியது. ஆனால் 5 ஏலதாரர்களுக்கு 170 டன் அரிசி மட்டுமே விற்பனையானது. தற்போது அடுத்த ஏலம் ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் பேசிய சோப்ரா, 'ஒரு சுற்றில் நல்ல பதில் கிடைக்காவிட்டால் மனம் தளர வேண்டாம். திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் அரிசி விற்பனை முடிவுக்கு வரவில்லை. இது மார்ச் 31 ஆம் தேதி, 2024 வரை தொடரும் மற்றும் ஒவ்வொரு வாரமும் மின்-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என்றார்.
இதற்கிடையில் அரிசி விற்பனையை அதிகரிக்க அரசாங்கம் திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டதித்ல் மாற்ற செய்ய திட்டமிட்டுள்ளதா? என்று சோப்ராவிடம் கேட்டபோது. இதற்கு பதிலளித்த, உணவுத்துறை செயலர் கூறுகையில், 'அரசுக்கு விருப்பங்கள் உள்ளன, அடுத்த சில சுற்றுகளில் தேவைப்பட்டால் அவற்றை பயன்படுத்திக்கொள்ளும். பொறுத்திருந்து பார்ப்போம். மாற்றங்களுக்கு அரசு தயாராக உள்ளது என்றார்.
மேலும் படிக்க | மத்திய அரசின் அசத்தல் திட்டம்... மாதம் ₹200 முதலீட்டில் ₹72,000 பென்ஷன் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ