Big Decision! PF, சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு வாபஸ்- மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

Small savings schemes: மார்ச் 31 அன்று, PPF, சுகன்யா சமிர்தி போன்ற அனைத்து சிறிய சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக வெளியான அறிவிப்பு திரும்பப்பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 1, 2021, 09:29 AM IST
Big Decision! PF, சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு வாபஸ்- மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு title=

புது டெல்லி: Small savings schemes: மார்ச் 31 அன்று, PPF, சுகன்யா சமிர்தி போன்ற அனைத்து சிறிய சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக வெளியான அறிவிப்பு திரும்பப்பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharamanதனது சொந்த ட்விட்டர் கணக்கிலிருந்து அரசாங்கத்தின் இந்த முடிவைப் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார். அதில்,  "இந்திய அரசாங்கத்தில் அனைத்து சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான (small savings schemes) வட்டி விகிதங்களும் ஏற்கெனவே 2020 2021 கடைசிக் காலாண்டில் இருந்த விகிதத்திலேயே தொடரும். நேற்றிரவு வெளியிடப்பட்ட புதிய வட்டி விகித அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

மூத்த குடிமக்களுக்கும் நிவாரணம்
ஒவ்வொரு காலாண்டிலும் சிறிய சேமிப்பு திட்டங்களை அரசாங்கம் அறிவிக்கிறது. புதன்கிழமை, 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் திருத்தியது, அதாவது 2021 ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை. ஐந்தாண்டு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதங்களை அரசாங்கம் புதன்கிழமை 0.9% குறைத்து 6.5% ஆக குறைத்தது. இருப்பினும், இப்போது பழைய வட்டி விகிதம் மட்டுமே பொருந்தும்.

சுகன்யா சம்ரிதி மீதான வட்டி விகிதங்கள் தொடர்ந்து பொருந்தும்.
பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) (sukanya samriddhi yojana) திட்டத்துக்கான வட்டி 7.6-லிருந்து 6.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கிசான் விகாஸ் பத்ரா
கிசான் விகாஸ் பத்திரங்களின் ஆண்டு வட்டிவிகிதம் 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு 6.2 சதவீதமாக்கப்பட்டு இருக்கிறது.

தேசிய சேமிப்பு பத்திரங்கள்
இதுபோலவே, தேசிய சேமிப்பு பத்திரங்கள் (என்எஸ்சி) மீதான வட்டி 6.8-லிருந்து 5.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தபால் அலுவலக சேமிப்பு
தபால் அலுவலக சேமிப்புக் கான வட்டி விகிதம் 0.40 முதல் 1.10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டி விகிதம் 4.4 சதவீதம் முதல் 5.3 சதவீதமாக இருக்கும்.இதுபோல பல்வேறு கால அளவு கொண்ட வங்கி வைப்புகள் மீதான வட்டியும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News