7th Pay Commission DA Hike: உத்தரகாண்ட் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி குறித்து மகிழ்ச்சி வந்துள்ளது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை (DA) 4 சதவிதம் உயர்த்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அரசின் இந்த முடிவால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இதுவரை உத்தரகாண்ட் அரசு ஊழியர்களுக்கு 38 சதவித அகவிலைப்படி வழங்கப்படுகிறது. தற்போதைய 4 சதவித உயர்வுக்குப் பிறகு, இப்போது அவரது அகவிலைப்படி 42 சதவிதமாக அதிகரித்துள்ளது.
ஆண்டு டிஏ மொத்தம் ரூ.90,720
அகவிலைப்படி உயர்வு குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி அளித்துள்ள அறிக்கையில்,"அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றத்திற்குப் பிறகு, இப்போது ரூ.18 ஆயிரம் அடிப்படை ஊதியத்தில் மொத்த அகவிலைப்படி ஆண்டுக்கு ரூ.90 ஆயிரத்து 720 ஆக இருக்கும். தற்போது, 38 சதவித அகவிலைப்படி அடிப்படையில், ரூ.18 ஆயிரம் அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6 ஆயிரம் 840 அகவிலைப்படி வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க | 2000 ரூபாய் நோட்டை மாற்றும் முன் இந்த 7 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்..!
அகவிலைப்படி ரூ.7,560 ஆக அதிகரிப்பு
தற்போது 4 சதவித உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் அகவிலைப்படி ரூ.7,560 ஆக உயர்ந்துள்ளது. ஊழியரின் அடிப்படை ஊதியம் மாதம் ரூ.18 ஆயிரம் எனில், இதன்படி 18000 x 42/100 அதாவது மாதம் ரூ.7560 அகவிலைப்படி கிடைக்கும். அரசால் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும், அதாவது உயர்த்தப்பட்ட சம்பளத்துடன், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5 மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
டிஏ ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இதன் அடிப்படையில், மத்திய ஊழியர்களுக்கு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. மத்திய ஊழியர்களின் அடுத்த அகவிலைப்படி ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அரசு செப்டம்பரில் வெளியிடலாம். இம்முறையும் அகவிலைப்படி 4 சதவிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது நடந்தால் அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும்.
டிஏ-வை உயர்த்திய மாநிலங்கள்
முன்னதாக பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்திய பின் தங்களின் ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தியது. அதில், ராஜஸ்தான், அசாம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்துள்ளன. மேலும், மேற்கு வங்கத்தில் டிஏ உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம் 2 பெரிய குட் நியூஸ்...டிஏ உடன் இதுவும் அதிகரிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ