EPFO Update: பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் மாதா மாதம் பிஎஃப் தொகை கழிக்கப்படுகின்றது. பணி ஓய்வுக்கு பிறகு பெரிய கார்ப்பஸ், மாத ஓய்வூதியம் ஆகியவை தவிர இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) இன்னும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.
இபிஎஃப் கணக்கு (EPF Account) வைத்திருக்கும் நபர்களுக்கு கடன் மற்றும் காப்பிட்டு வசதியும் அளிக்கப்படுகின்றது. இது தவிர இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) கூடுதல் போனஸ் தொகையும் கிடைக்கின்றது. ஆனால், இந்த வசதி பற்றி பலருக்குத் தெரிவதில்லை. வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கூடுதல் போனஸ் பெறும் பயனாளிகளின் பட்டியலையும் தயாரித்து வருகிறது.
EPFO Bonus: இந்த போனஸ் அனைத்து இபிஎஃப் சந்தாதாரர்களுக்கும் கிடைக்குமா?
இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் நபர்களுக்கு கிடைக்கும் கூடுதல் போனஸின் அதிகபட்சத் தொகை ரூ.50,000 ஆகும். ஆனால் இபிஎஃப்ஓ -வின் இந்த வசதியை பற்றி அறியாத லட்சக்கணக்கான கணக்குதாரர்கள் உள்ளனர். இதன் காரணமாக இதற்கான தகுதி இருந்தும் இதை பலர் பயன்படுத்திக்கொள்வதில்லை. EPFO இன் இந்த சிறப்பு போனஸ் வசதி என்ன? அதன் கீழ் என்ன நன்மைகள் கிடைக்கின்றன? இவற்றை பற்றி இங்கே விரிவாக காணலாம்.
Additional Bonus: அடிப்படை சம்பளம் கொண்டு கணக்கிடப்படுகிறது
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு லாயல்டி மற்றும் லைஃப் பெனிஃபிட் (Loyalty cum Life Benefit) மூலம் EPFO இலிருந்து இந்த கூடுதல் போனஸ் தொகை கிடைக்கும். இதற்கு, வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சில நிபந்தனைகளை உறுப்பினர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு PF பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்கள் மட்டுமே கூடுதல் போனஸின் பலனைப் பெற முடியும். இதனுடன், ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் என்பது அவர்களது அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும். அதிகபட்ச போனஸ் தொகை ரூ.50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 60வது வயதில் மாதம் ₹61,000 பென்ஷன் பெற... PPF கணக்கில் இவ்வாறு முதலீடு செய்யவும்
இபிஎஃப்ஓ போனஸ்: யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
- ரூ.5,000 அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு ரூ.30,000 வரை கூடுதல் போனஸ் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.
- ரூ.10,000 அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு ரூ.40,000 போனஸ் கிடைக்கும்.
- இதற்கு மேல் அடிப்படை சம்பளம் உள்ள ஊழிய்ரகளுக்கு போனஸ் தொகை, 50,000 ரூபாய் வரை கிடைக்கும்.
இந்த போனஸ் தொகையைப் பெற, பிஎஃப் உறுப்பினர்கள் குறைந்தது 20 வருடங்கள் வேலை செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு பணிபுரியும் பணியாளர்கள் இதற்கு தகுதியை பெற மாட்டார்கள்.
யார் இதற்கு விண்ணப்பிக முடியும்?
இபிஎஃப்ஓ, கூடுதல் போனஸ் வசதியை பணி ஓய்வுக்கு பிறகான நன்மையாக தொடங்கியது. இதன் மூலம் பணியாளர்கள் கூடுதல் பணத்தின் பலனைப் பெற முடியும். 20 வருட சேவையை முடித்திருக்கும் பிஎஃப் உறுப்பினர்கள், அவர்களது அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப கூடுதல் போனஸுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் செயல்முறைகள் மூலமாக போனஸுக்கு விண்ணப்பிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ