EPF கணக்கின் இருப்பை தெரிந்துகொள்ள ஈசியான 4 வழிகள்

How to Check EPF Account Balance: இபிஎஃப் உறுப்பினர்கள் வீட்டில் இருந்தபடியே நான்கு எளிய வழிகளில் தங்கள் கணக்கு இருப்பை தெரிந்துகொள்ளலாம். அந்த வழிகளை பற்றி இங்கே காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 20, 2024, 03:32 PM IST
  • SMS மூலம் இபிஎஃப் இருப்பை தெரிந்துகொள்ளும் முறை என்ன?
  • மிஸ்ட் கால் மூலம் இபிஎஃப் இருப்பை தெரிந்துகொள்ளும் முறை என்ன?
  • உமங் செயலி மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?
EPF கணக்கின் இருப்பை தெரிந்துகொள்ள ஈசியான 4 வழிகள் title=

How to Check EPF Account Balance in Tamil: மாதா மாதம் சம்பளத்தில் ஒரு பங்கை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யும் இபிஎஃப் சந்தாதாரரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பிரபலமான ஓய்வூதியத் திட்டமான ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF) மூலம், பணியாளர்கள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து குறிப்பிடத்தக்க ஓய்வூதிய கார்பஸை உருவாக்கலாம். ஒவ்வொரு மாதமும் பணியாளரின் சம்பளத்தில் இருந்து முதலீட்டுக்கான தொகை கழிக்கப்படுவதால், இந்த நிதியின் கார்பஸில் பங்களிப்பது ஒரு சுமையாக இல்லாமல் எளிதாகிறது. பணியாளர்கள் மட்டுமின்றி பணியாளர் அளிக்கும் அதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. பணியாளரின் அகவிலைப்படி மற்றும் அடிப்படை வருமானத்தில் 12 சதவீதம் இதில் பங்களிப்பாக அளிக்கப்படுகின்றது. 

பொதுவாக பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதிய நிதியிலிருந்து இபிஎஃப் தொகையை (EPF Amount) எடுக்கிறார்கள். எனினும், ஓய்வுபெறும் முன்னரே சில அவசர காலங்களிலும் இந்த EPF கார்பஸின் ஒரு பகுதியை பணியாளர்கள் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு EPFO அனுமதி அளிக்கிறது. இருப்பினும், ஊழியர்கள் தங்கள் EPF கார்பஸை எடுப்பதற்கு, தங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். இதற்கு எங்கும் அலைய வேண்டாம். இணைய அணுகல் இல்லாமல் கூட இந்த விவரத்தை தெரிந்துகொள்ளலாம். அதற்கான வழிகளை பற்றி இங்கே காணலாம். 
 
EPF Balance Check: SMS மூலம் இபிஎஃப் இருப்பை தெரிந்துகொள்ளும் முறை

- தங்கள் UAN-ஐ செயல்படுத்திய, அதாவது ஆக்டிவேட் செய்துள்ள ஊழியர்கள் தங்கள் PF கணக்கின் விவரங்களை ஒரு குறுஞ்செய்தி சேவை (SMS) மூலம் பெறலாம். 

- எஸ்எம்எஸ் மூலம் EPF இருப்பைச் சரிபார்க்க, பணியாளர்கள் தங்கள் UAN ஐ KYC தகவலுடன் இணைக்க வேண்டும்.

- அதன் பிறகு, பின்வரும் வடிவத்தில் 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்: EPFOHO UAN ENG

- இதில் கடைசி மூன்று எழுத்துக்கள் மொழியை குறிக்கும். தமிழுக்கு EPFOHO UAN TAM என அனுப்ப வேண்டும்.

- தங்கள் கணக்கின் தற்போதைய EPF இருப்பு விவரங்களை பணியாளர்கள் தாங்கள் விரும்பும் மொழியில் பார்க்கும் விருப்பத்தை பெறுகிறார்கள். 

- பிற மொழிகளுக்கு அந்தந்த மொழியின் முதல் மூன்று எழுத்துக்களை உள்ளிட வேண்டும்.

மேலும் படிக்க | இரண்டு வங்கி கணக்கிற்கு மேல் வைத்துள்ளீர்களா? இந்த விதிகளை தெரிஞ்சுக்கோங்க!
 
EPF Balance Check: மிஸ்ட் கால் மூலம் இபிஎஃப் இருப்பை தெரிந்துகொள்ளும் முறை 

- மிஸ்ட் கால் (Missed Call) மூலம் EPF கணக்கின் தற்போதைய இருப்பை சரிபார்க்க, பதிவுசெய்யப்பட்ட மொபைலில் இருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு டயல் செய்யவும். 

- மிஸ்ட் கால் மூலம் தகவலைப் பெற, ஊழியரின் UAN அவர்களின் KYC உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

- குறிப்பிட்ட எண்ணை டயல் செய்தவுடன், சில ரிங்ளுக்குப் பிறகு அழைப்பு துண்டிக்கப்படும். 

- இதைத் தொடர்ந்து, இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF SUbscribers) தங்கள் EPF தகவலுடன் கூடிய SMS அலர்ட்டைப் பெறுவார்கள்.
 
EPF Balance Check: ஆன்லைனில் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி?
 
- உங்கள் PF இருப்பைச் செக் செய்ய, https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (EPFO Website) செல்லவும். 

- இங்கே முகப்புப் பக்கத்தில் EMPLOYEES என்ற விருப்பத்தைக் காண்பீர்கள். அங்கே பணியாளர்கள் தங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு தங்கள் இருப்பைச் சரிபார்க்கலாம்.
 
EPF Balance Check: உமங் செயலி மூலம் இபிஎஃப் இருப்பை செக் செய்வது எப்படி? 
 
- பணியாளர்கள் தங்கள் EPF இருப்பைச் சரிபார்க்க, உமங் செயலியை பயன்படுத்தலாம். 

- இந்த செயலியில் பணியாளர்கள் 127 வகையான சேவைகளின் பலனைப் பெறலாம். 

- உமங் செயலி (Umang App) இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் செயலியாகும்.

- இந்த செயலியானது ஆல்-இன்-ஒன், சிங்கிள், யூனிஃபைட், செக்யூர், மல்டி-சேனல், மல்டி-ப்ளாட்ஃபர்ம், பல மொழி வசதிகளை ஆகியவற்றை பயனர்களுக்கு வழங்குகிறது.

மேலும் படிக்க | கையில் ரூ.50 ஆயிரம் இருக்கா? ‘இந்த’ தொழிலில் முதலீடு செய்தால் பல லட்சம் வருமானம் வரும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News