பான் கார்டு: நமது நாட்டில் மக்களுக்கு மிகவும் அவசியமான சில ஆவணங்களில் பான் கார்டும் ஒன்றாகும். வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, சொத்துக்கள் வாங்குவது முதல், பல முக்கிய பணிகளிலும், ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகவும் இது பயன்படுத்தப்படுகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் பான் கார்டு வைத்திருப்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. பான் கார்ட் இல்லாதவர்கள் கண்டிப்பாக உடனடியாக அதை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்த பதிவில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் செயல்முறை மூலம் இ-பான் கார்டைப் பெறுவது எப்படி என்பது பற்றி காணலாம்.
இதற்கான செயல்முறை என்ன?
- ஆன்லைனில் பான் கார்ட் பெற, முதலில் வருமான வரித்துறையின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். விரைவு இணைப்புகள் (க்விக் லிங்க்ஸ்) என்ற தலைப்புடன் இரண்டு வரிகளில் பல இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில், இடது பக்க பகுதியில் உள்ள ஆறாவது எண்ணில் உள்ள உடனடி இ-பான் (Instant E-PAN) இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
- e-PAN இன் இணைப்பு திறந்த பிறகு, கீழே Get ePAN என்ற மற்றொரு இணைப்பு இருக்கும். இதில் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். இங்கிருந்து பான் கார்டை உருவாக்கும் செயல்முறை தொடங்கும்.
மேலும் படிக்க | உஷார்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களே! இதை நம்பி ஏமாற வேண்டாம்!
- முதல் கட்டத்தில், உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். உங்களின் தற்போதைய மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும், உங்கள் முழு பிறந்த தேதியும் ஆதாரில் குறிப்பிடப்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
- கேட்கப்பட்ட தகவலைக் கிளிக் செய்து தொடர வேண்டும், இந்த வழியில் நீங்கள் அடுத்த கட்டத்தை அடைவீர்கள்.
- OTP குறியீடு உங்கள் பதிவு எண்ணில் செய்தி மூலம் வரும். அதை கேட்கப்படும் இடத்தில் உள்ளிட வேண்டும்.
- இதற்குப் பிறகு, உங்கள் மின்னஞ்சல் ஐடி உட்பட பிற தொடர்புடைய தகவல்கள் கேட்கப்படும். அதை நிரப்ப வேண்டும். உங்கள் தகவல்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தவுடன், சிறிது நேரத்தில் உங்கள் பேன் எண்ணை நீங்கள் பெறுவீர்கள்.
- இந்த இணையதளத்தின் டவுன்லோட் பான் (Download PAN) இணைப்பிற்கு சென்று PDF வடிவில் PAN கார்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.
- இந்த முழு செயல்முறைக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை. இது வருமான வரித் துறையின் இணையதளத்திலும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. பான் கார்டின் ஹார்ட் காப்பி வேண்டுமானால் 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | பான் கார்டு பயனாளர்கள் இந்த தவறை செய்தால் ரூ.10,000 அபராதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ