Reserve Bank of India Latest News: அனைத்து வணிக வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், வைப்புத்தொகை பெறும் NBFC-களுக்கு ஆர்பிஐ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் சேமிப்புக் கணக்குகளில் பரிந்துரைக்கப்பட்ட வாரிசுதாரர் வசதி குறித்து அனைத்து வங்கிகள், முதன்மை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் NBFC-கள் (வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்) ஆகியவற்றுக்கு சில அறிவுறுத்தல்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டு உள்ளது. அதுக்குறித்து பார்ப்போம்.
இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, ஒவ்வொரு நீண்ட கால நிலையான வைப்பு (FD), சேமிப்புக் கணக்கு மற்றும் வங்கி லாக்கருக்கும், இனி வாரிசுதாரர்கள் (Nominees) அவசியம் எனக் கூறியுள்ளது. ஒருவேளை வங்கி வாடிக்கையாளர், இறந்துவிட்டால், அவரது வங்கி கணக்கு சம்பந்தமாக, அவரது குடும்ப உறுப்பினர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல், அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளவே, இந்த அறிவிப்பு என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
வங்கி கணக்குகளில் வாரிசுதாரர்கள் ஏன் அவசியம்?
நிலையான வைப்புத்தொகை, சேமிப்புக் கணக்குகள் மற்றும் வங்கி லாக்கர்கள் வைத்திருக்கும் அனைத்து தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களிடமிருந்து நாமினிக்கள் பரிந்துரைகளைப் பெறுமாறு ஆர்பிஐ (RBI) அனைத்து வணிக வங்கிகள் மற்றும் NBFC-களுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதன் நோக்கம், நிலையான வைப்பு நிதி, சேமிப்புக் கணக்கு அல்லது வங்கி லாக்கர் வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் இறந்தால் ஏற்படும் சிரமங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதாகும்.
நாமினி சேர்ப்பதால் என்ன பயன்?
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, நாமினிக்கள் சேர்க்கப்பட்டால், உரிமைகோரல்களைத் தீர்ப்பதை எளிதாக்குவதையும், வங்கியில் பணம் போட்டிருந்தால், அவர் இறந்துவிட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் பணம் பெறுவதில் ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை
எனவே வங்கிகள் மற்றும் NBFC களுக்கான வாரிசுதாரரை சேர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தவிர, ஏற்கனவே உள்ள வழிமுறைகளில், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு "வாரிசுதாரர் நியமனம்" வசதியைப் பற்றித் தெரிவிக்க வேண்டும் மற்றும் அதன் நன்மைகளைப் பற்றி அவர்களிடம் சொல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் இது தொடர்பாக வங்கி ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ உத்தரவு
இந்திய ரிசர்வ் வங்கி, பல வைப்பு கணக்குகளில் வாரிசுதாரர் சேர்க்கப்படவில்லை மற்றும் அதற்கான வசதி இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளது. இதன் காரணமாக ஒரு வைப்புத்தொகையாளர் இறக்கும் போது, அவரது குடும்ப உறுப்பினர்கள் பணத்தைப் பெறுவதில் சிக்கலுக்கு வழிவகுக்கிறது. எனவே, நிலையான வைப்பு கணக்குகள், சேமிப்புக் கணக்குகள் அல்லது பாதுகாப்பு லாக்கர்களை வைத்திருப்பவர்களாக இருந்தாலும், ஏற்கனவே உள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களிடமிருந்து "வாரிசுதாரர் நியமனம்" பரிந்துரைகளைப் பெறுமாறு அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ உத்தரவிட்டு உள்ளது.
வங்கி ஊழியர்களுக்கு பயிற்சி
வாடிக்கையாளர் சேவைக் குழு (CSC) அல்லது இயக்குநர்கள் குழு, நியமனக் காப்பீட்டின் நிலையைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்ய வேண்டும். இந்த மதிப்பாய்வின் முன்னேற்ற அறிக்கை மார்ச் 31, 2025 முதல் காலாண்டு அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் DAKSH போர்ட்டலில் சமர்ப்பிக்கப்படும். கூடுதலாக, வங்கி கிளைகளில் உள்ள முன்னணி ஊழியர்களுக்கு வாரிசுதாரர் சேர்ப்பு கோரிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர் இறந்தால், அதை எவ்வாறு திறம்பட கையாளுவது போன்ற பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என அறிவிருத்தல்.
வங்கி கணக்கு திறப்பு படிவம்
வங்கி கணக்கு திறப்பு படிவம் வாடிக்கையாளர்களுக்கு "ஒரு வாரிசுதாரரை சேர்க்க அல்லது வாரிசுதாரர் சேர்க்கும் வசதியிலிருந்து விலக்கு அளிக்க" போன்ற விருப்பம் வழங்கப்படும் வகையில் வங்கி கணக்கு திறப்பு படிவம் திருத்தப்பட வேண்டும் எனவும் ஆர்பிஐ கூறியுள்ளது..
வாரிசுதாரர் வசதியின் நன்மைகள்
வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகத் தெரிவிப்பதைத் தவிர, பல்வேறு ஊடக சேனல்களைப் பயன்படுத்தி வாரிசுதாரர் வசதியின் நன்மைகளை விளம்பரப்படுத்த வங்கிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. இதன் கீழ், அனைத்து கணக்குகளிலும் வாரிசுதாரர் சேர்க்கப்படுவதை உறுதிசெய்ய வங்கிகள் அவ்வப்போது பிரச்சாரங்களை நடத்த வேண்டும் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் படிக்க - கடைசி தேதி ஜனவரி 23.. வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி எச்சரிக்கை!
மேலும் படிக்க - மக்களே கவனம்! அதிக வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா? RBI முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ