IDBI உத்சவ் சிறப்பு FD முதலீடுகள்... இன்னும் 10 நாள் தான் இருக்கு...மிஸ் பண்ணாதீங்க..!!

ஐடிபிஐ வங்கி சிறப்பு நிலையான வைப்பு: ஐடிபிஐ வங்கி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நிலையான வைப்புத்தொகை முதலீட்டு திட்டத்தை வழங்குகிறது, அதில் முதலீடு செய்ய இன்னும் 10 நாட்கள் தான் வாய்ப்பு கிடைக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 20, 2024, 06:31 PM IST
  • ஐடிபிஐ வங்கியின் சிறப்பு நிலையான வைப்புத் திட்டம்.
  • IDBI உத்சவ் சிறப்பு 400 நாட்கள் FD முதலீட்டு திட்டம்.
  • உத்சவ் எஃப்டியில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7.60% வட்டியை வழங்குகிறது.
IDBI உத்சவ் சிறப்பு FD முதலீடுகள்... இன்னும் 10 நாள் தான் இருக்கு...மிஸ் பண்ணாதீங்க..!! title=

ஐடிபிஐ வங்கி சிறப்பு நிலையான வைப்பு: ஐடிபிஐ வங்கி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நிலையான வைப்புத்தொகை முதலீட்டு திட்டத்தை வழங்குகிறது, அதில் முதலீடு செய்ய இன்னும் 10 நாட்கள் தான் வாய்ப்பு கிடைக்கும். வாடிக்கையாளர்கள் IDBI வங்கியின் சிறப்பு FD திட்டத்தில் ஜூன் 30, 2024 வரை முதலீடு செய்யலாம். 375 நாட்களுக்கு FD முதலீடுகளுக்கு 7.60 சதவீத வட்டியைப் பெற விரும்பினால், அதில் முதலீடு செய்யலாம். குறைந்த நேரத்தில் அதிக வருமானத்தைப் பெற விரும்பினால், இந்த மாத இறுதிக்குள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.

ஐடிபிஐ வங்கியின் சிறப்பு நிலையான வைப்புத் திட்டம்

ஐடிபிஐ வங்கி தனது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் சிறப்பு நிலையான வைப்புத்தொகை முதலீட்டு திட்டத்தை வழங்குகிறது. ஐடிபிஐ வங்கி 300 நாட்கள், 375 நாட்கள் மற்றும் 444 நாட்களுக்கு சிறப்பு FD முதலீட்டு திட்டத்தை வழங்குகிறது. இதற்கு 7.75 சதவீத வட்டி கிடைக்கும். இந்த சிறப்புத் திட்டத்தில், 30 ஜூன் 2024 வரை வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யலாம்.

IDBI உத்சவ் சிறப்பு 400 நாட்கள் FD முதலீட்டு திட்டம் (IDBI Utsav Special 400 days FD)

ஐடிபிஐ வங்கி இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ஜூன் 30, 2024 வரை உத்சவ் எஃப்டி திட்டத்தில் முதலீடு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐடிபிஐ வங்கி வழக்கமான வாடிக்கையாளர்கள், என்ஆர்ஐ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்கள், 444 நாட்கள் எஃப்டியில் 7.25% வட்டி பெறலாம். முதலீட்டாளர்கள் இந்த FD முதலீட்டை முன்கூட்டியே திரும்பப் பெறவும் மூடவும் வங்கி அனுமதிக்கிறது.

மேலும் படிக்க | போஸ்ட் ஆபீஸ் RD திட்டம்... மாதம் ரூ.7000 முதலீட்டில் ரூ.12 லட்சம் பெறலாம்...!

IDBI உத்சவ்  375 நாட்களுக்கான FD முதலீட்டு திட்டம் (IDBI Utsav FD Scheme 375 days)

ஐடிபிஐ வங்கி 375 நாட்களுக்கான உத்சவ் எஃப்டியில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7.60% வட்டியை வழங்குகிறது. அதே நேரத்தில், வழக்கமான வாடிக்கையாளர்கள், என்ஆர்ஐ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்களுக்கு 375 நாட்களுக்கு எஃப்டி முதலீட்டில் 7.10% வட்டி அளிக்கிறது. இந்த FD திட்டத்தில் பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறுதல் அல்லது கணக்கை மூடுவது போன்ற விருப்பத்தையும் வங்கி வழங்குகிறது.

IDBI உத்சவ் 300 நாட்கள் FD முதலீட்டு திட்டம் (IDBI Utsav 300 days FD scheme)

ஐடிபிஐ வங்கி 300 நாட்கள் உத்சவ் எஃப்டி முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டி வழங்குகிறது. அதே நேரத்தில், வழக்கமான வாடிக்கையாளர்கள், என்ஆர்ஐ மற்றும் என்ஆர்ஓ வாடிக்கையாளர்களுக்கு 300 நாட்களுக்கு எஃப்டிக்கு 7.05% வட்டி அளிக்கிறது. இந்த FD முதலீட்டில் போட்ட பணத்தை முன்கூட்டியே திரும்பப் பெறவும் அனுமதிக்கிறது.

மேலும் படிக்க | FD முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்கும் HDFC வங்கி... சான்ஸை மிஸ் பண்ணாதீங்க...!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News