ITR Filing Last Date: ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் ‘Extend Due Date Immediately’, நீட்டுக்குமா அரசு?

ITR Filing Last Date: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்குமாறு வரி செலுத்துவோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 28, 2022, 11:01 AM IST
  • ஐடிஆர் தாக்கல் செய்ய கடைசி தேதி.
  • கடைசி தேதியை நீட்டுக்குமா அரசு?
  • ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் கோரிக்கை.
ITR Filing Last Date: ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் ‘Extend Due Date Immediately’, நீட்டுக்குமா அரசு? title=

ஐடிஆர் தாக்கல் செய்ய கடைசி தேதி: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியான ஜூலை 31 நெருங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்குமாறு வரி செலுத்துவோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்தும் பல பயனர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்னும் நான்கு நாட்கள் உள்ளன. தற்போது சமூக வலைதளங்களில் கடைசி தேதியை நீட்டிக்குமாறு பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

20 ஆயிரம் ட்வீட்கள்

இந்த நேரத்தில், 'Extend Due Date Immediately' அதாவது 'உடனடியாக காலக்கெடுவை நீட்டிக்கவும்' என்ற ஹேஷ்டாக் சமூக ஊடக தளமான ட்விட்டரில் பரவலாக ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக் மூலம் சுமார் 20 ஆயிரம் ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பும் இதுபோன்ற பிரச்சாரம் சமூக வலைதளங்களில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. 'Extend Due Date Immediately' என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் பிரச்சினைகளை விவரித்து வருகிறார்கள். மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் இதில் உதவி செய்யுமாறு கேட்டு வருகிறார்கள். 

மேலும் படிகக்க | ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதா?

இதுவே அரசின் முழுமையான திட்டம்

இருப்பினும், ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று மத்திய வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். கடைசி தேதியை நீட்டிக்க இதுவரை எந்த யோசனையும் இல்லை என்று பஜாஜ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கடைசி நாளில் 50 லட்சம் ரிட்டர்ன்கள் கிடைத்ததாகவும் அவர் கூறினார். இந்த முறை ஒரு கோடி ஐடிஆர் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார். 

போர்ட்டலின் ஸ்கிரீன் ஷாட் எடுத்து கோரிக்கை விடுத்த மக்கள்

ஐடிஆர் தாக்கலின் கடைசி தேதியை நீட்டிக்க பயனர்கள் பல வழிகளில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒரு பயனர் ஐடிஆர் போர்ட்டலின் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதை பகிர்ந்தார். போர்டலில் ஏற்படும் கோளாறை சுட்டிக்காட்டிய அவர் போர்டல் மீண்டும் டவுன் ஆனது என்றார். வேறு சில பிரச்சனைகளை சுட்டிகாட்டிய பயனர்கள் கடைசி தேதியை நீட்டிக்க மறுபரிசீலனை செய்ய கேட்டு வருகிறார்கள். 

2022-23 மதிப்பீட்டு ஆண்டிற்கு ஜூலை 25, 2022 வரை 3 கோடிக்கும் அதிகமான ஐடிஆர்-கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று திணைக்களம் வழங்கிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31க்குப் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு வரி செலுத்துவோர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிகக்க | ITR Filing Update: ITR தாக்கல் செய்ய வேண்டிய தேதியை தவறவிட்டால் என்ன நடக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News