மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட், இனி பாதி கட்டணம் செலுத்தி பயணிக்கலாம்

Free Travel Facility For Senior Citizen: தற்போது மாநில அரசிடம் இருந்து மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி பயண டிக்கெட் கட்டணத்தை மாநில அரசு குறைத்துள்ளது. இனி, பயணத்தின் போது பாதி கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 4, 2023, 04:22 PM IST
  • பேருந்து டிக்கெட் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
  • 75 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பேருந்து சேவை இலவசம்.
  • டெல்லி மற்றும் பஞ்சாபில் பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம்.
மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட், இனி பாதி கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் title=

மூத்த குடிமக்களுக்கு இலவச பயண வசதி: பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகிறது. தற்போது மாநில அரசிடம் இருந்து மற்றொரு பெரிய நல்ல செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பயண டிக்கெட் கட்டணத்தை மாநில அரசு குறைத்துள்ளது. எனவே இனி, பயணத்தின் போது பாதி கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டும். இந்த நிலையில் எந்த மாநிலத்தின் பயணிகள் பாதி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

இப்போது பாதி பணம் செலுத்தினால் போதும்
இந்த நிலையில் இந்த சிறப்பு வசதியை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா அரசு தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் மகிளா சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான பேருந்து டிக்கெட் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கும் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இதில், 65 முதல் 75 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் பயன் பெறுகின்றனர். அத்துடன் 75 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பேருந்து சேவை இலவசமாக மாநில அரசு வழங்குகிறது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி, அரசு வெளியிட்ட புதிய தகவல்

பேருந்து கட்டணத்தில் தள்ளுபடி
இந்த தள்ளுபடியானது பஸ் கட்டணத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த வசதியை அரசு போக்குவரத்து கழகம் தற்போது செய்து வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இது குறித்து தகவல் அறிவித்து இருந்தார். இதனுடன், தற்போது மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டணத்தையும் ஹரியானா அரசும் குறைத்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் இந்த வசதி அமலுக்கு வந்துள்ளது
இந்த நிலையில் தற்போது மூத்த குடிமக்களுக்கான கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியானது ஹரியானா மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள, பேருந்தில் பயணம் செய்யும் போது டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஹரியானாவின் குடியிருப்புச் சான்றிதழைக் காட்ட வேண்டும். மேலும் இந்த சிறப்பு வசதியானது  ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல மாநிலங்களில் இலவச பேருந்து பயண வசதி தரப்படுகிறது
முன்னதாக ஹரியானாவில் 60 வயது பெண்கள் மட்டுமே இந்த வசதியை வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இனி 65 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் இந்த சலுகையைப் பெறுவார்கள். இதனிடையே டெல்லி மற்றும் பஞ்சாபில் பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம். இது தவிர, மூத்த குடிமக்களுக்கும் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பேருந்து கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆதார் - பான் இல்லாமல் நீங்கள் இனி பணத்தை சேமிக்க முடியாது: மத்திய அரசு அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News