பெங்களூரு: மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் கர்நாடகா ஆரோக்கிய சஞ்சீவினி திட்டத்தை அரசு விரைவில் தொடங்கும் என்றும், 7வது ஊதியக் குழுவை நவம்பரில் அமல்படுத்த உள்ளதாக ஜி பரமேஸ்வரா தெரிவித்தார். 2022 நவம்பரில் அமைக்கப்பட்ட 7வது ஊதியக் குழு, அடுத்த மாதத்திற்குள் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என்றும், அதை அமல்படுத்துவது தொடர்பாக கர்நாடக மாநில அரசு உரிய முடிவை எடுக்கும் என்றும் உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா நேற்று (2023 அக்டோபர் 27 வெள்ளிக்கிழமை) தெரிவித்தார்.
ஊதியக் குழு தனது பரிந்துரைகளை நவம்பரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சம்பள கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவது குறித்து முடிவெடுப்பதாக முதல்வர் சித்தராமையா ஏற்கனவே உறுதி அளித்துள்ள நிலையில், உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வராவும் தற்போது தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய அரசைத் தொடர்ந்து, கர்நாடக மாநில அரசும் லட்சக்கணக்கான ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. நீண்ட கால ஆலோசனைகளுக்குப் பிறகு கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மார்ச் மாதம் ஊழியர் சங்கங்கள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு, அடிப்படை சம்பளத்தில் 17% வரை இடைக்கால உயர்வு இருக்கும் என்று கூறப்பட்டது.
மேலும் படிக்க | ஆதார் எண்ணை அஞ்சல் அலுவலக கணக்குகளுடன் இணைக்காவிட்டால் என்ன ஆகும்?
தற்போது, அரசு ஊழியர்கள் கவலைப்பட தேவையில்லை என்று தெரிவித்த உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா, மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியைத் தொடங்கியபோது அவர் தெரிவித்தார்.
அகவிலைப்படி உயர்வு கோரி கர்நாடகா ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். தற்போது கர்நாடக மாநில அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. அகவிலைப்படியை 3.75 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ள கர்நாடக மாநில அரசின் உத்தரவுக்குப் பிறகு, மாநிலத்தில் ஊழியர்களின் டிஏ 38.75 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கொடுத்த தேர்தல் வாக்குறுதியின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை (new pension scheme (NPS)) ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (old pension scheme (OPS)) அமல்படுத்த அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு ரூ.10288+10288+10288=30864 நிலுவைத் தொகை கிடைக்கும்.. எப்போது?
மேலும், தொடர்பாக 2022 நவம்பரில் அமைக்கப்பட்ட 7வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அனுப்பும் அறிக்கையின் அடிப்படையில் மாநில அரசு பரிசீலனை செய்து ஊதியத்தை முடிவு செய்யும்” என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா தெரிவித்தார்.
மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் கர்நாடகா ஆரோக்கிய சஞ்சீவினி திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தும் என்று கூறிய உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா, அடுத்த 5 ஆண்டுகளில் 2.5 லட்சம் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை மாநில அரசு நிரப்பும் என்று அமைச்சர் கூறினார்.
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை விரைவில் அமல்படுத்தவும், அகவிலைப்படியை 23 சதவீதம் உயர்த்தவும், அரசு ஊழியர் சங்கத் தலைவர் சி.எஸ்.ஷடாக்ஷரி உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வராவிடம் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ் வருது.. அகவிலைப்படியில் புதிய டுவிஸ்ட், இதோ அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ