பெட்ரோல் விலை இந்தியாவில் பல இடங்களில் ரூ .100-ஐ தொட்டு விட்டது. இதன் காரணமாக ஸ்கூட்டரை ஓட்டுவதற்கும் நீங்கள் பல முறை சிந்திக்க வேண்டியுள்ளது. ஆகையால் இரு சக்கர வாகன நிறுவனங்கள் இப்போது தங்கள் கவனத்தை மின்சார இரு சக்கர வாகனங்கள் பக்கம் செலுத்தி வருகின்றன. பெட்ரோலுடன் ஒப்பிடும்போது இதில் செலவுகள் மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், தற்போது சுசுகி (Suzuki) நிறுவனமும் எலெக்ட்ரிக் இருசக்கர (Electric Scooter) வாகனத்தை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இதனை உறுதி செய்யும் வகையில் ஒரு முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சுசுகி நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் எப்படி இருக்கும் என்பது பற்றிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
ALSO READ | TVS நிறுவனத்தின் bluetooth Scooter: இனி தொலைவிலிருந்தே பல பணிகளை செய்யலாம்
காப்புரிமைக்காக வரையப்பட்ட மாதிரி படம் தற்போது கசிந்துள்ளது. முழுமையான உருவத்தை இன்னும் நிறுவனம் வெளியீடு செய்யவில்லை. உற்பத்தி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதால் மிக விரைவில் இவ்வாகனத்தின் வெளியீடு பற்றிய தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுசுகி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அதன் பர்க்மேன் ஸ்கூட்டர் மாடலின் அடிப்படையிலேயே மின்சார ஸ்கூட்டரை உருவாக்கி வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் அந்த வாகனம் குறித்த ஸ்பை படங்கள் இணையத்தின் வாயிலாக கசிந்தன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே காப்புரிமைக்காக வழங்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
குறிப்பாக, அதிக இட வசதி, பெரிய பேட்டிரிகள், பின் வீலுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் மின் மோட்டார் ஆகியவை இடம்பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது. மின் மோட்டார் மற்றும் பல முக்கிய பாகங்கள் இருக்கைக்கு அடியிலேயே இடம்பெற இருக்கின்றன. மின் மோட்டாரை குளிர்ச்சிப்படுத்துவதற்கு ஏதுவாக பக்கவாட்டு பகுதிகளில் காற்று நுழையக் கூடிய வழிகள் வழங்கப்பட இருக்கின்றன. இதுபோன்ற கணிசமான தகவல்களே தற்போது வெளியாகியிருக்கின்றன. இவையனைத்தும் தற்போது கசிந்திருக்கும் மாதிரி புகைப்படத்தின் வாயிலாக கிடைத்தவை ஆகும்.
ALSO READ | Electric Scooter-களை அறிமுகம் செய்யவுள்ளன Hero, Honda: 5 மடங்கு செலவு குறையும்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR