தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படாத பெற்றோர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். இதற்கு சிறந்த திட்டமிடல் இருந்தால் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கலாம். நாட்டின் மிகவும் நம்பகமான நிறுவனமான எல்.ஐ.சி முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. சிறப்பு குழந்தைகளை மனதில் வைத்து எல்.ஐ.சி குழந்தைகளுக்கான மணி பேக் பாலிஸி திட்டம்( LIC New Children's Money Back Plan) ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்-
- இந்த காப்பீட்டைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 0 ஆண்டுகள்
- காப்பீடு எடுப்பதற்கான அதிகபட்ச வயது 12 ஆண்டுகள்
- குறைந்தபட்ச பாலிஸி தொகை ரூ .1,00,00
- காப்பீட்டிற்கான அதிகபட்ச தொகை என்ற வரம்பு ஏதும் இல்லை
- பிரீமியம் வேவர் பெனிபிட் ரைடர் - ஆப்ஷன் உள்ளது
- குழந்தைக்கு 18 வயது பூர்த்தியான உடன், 20 சதவீதம் தொகையை பெறலாம்
மேலும் படிக்க |ITR, வருமான வரி தாக்கல் சிக்கலின்றி செய்ய தேவையான 5 ஆவணங்கள்..!!!
நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் இந்தக் பாலிஸியின் கீழ், பாலிசிதாரருக்கு காப்பீட்டுத் தொகையில் 20 சதவீதம் பணம் திரும்பப் கிடைக்கிறது. பாலிசிதாரருக்கு 18, 20, 22 வயது பூர்த்தியடைந்த பின்னர் பாலிஸியின் 20 சதவிகித தொகை வழங்கப்படுகிறது. இது தவிர, நீங்கள் பாலிஸி முதிர்வில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி பேசினால், பாலிசிதாரருக்கு மீதமுள்ள 40 சதவீத தொகை போனஸுடன் கிடைக்கும்.
எல்.ஐ.சி புதிய சில்ரன் மணி பேக் பாலிஸி திட்டம் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
4.5% வரியுடன் முதல் ஆண்டு பிரீமியம் - ஆண்டு ஒன்றுக்கு - ரூ.55239 (ரூ.52860 + ரூ.2379) என கணக்கிடப்பட்டுள்ளது. அரை ஆண்டு ப்ரீமியம்- ரூ.27917 (ரூ.26715 + ரூ.1202) காலாண்டு ப்ரீமியம் - ரூ.14108 (ரூ.13500 + ரூ.608) மாத ப்ரீமியம்: ரூ.4703 (ரூ.4500 + ரூ.203). YLY மோடில் சராசரி பிரீமியம் / நாள் ஒன்றுக்கு: ரூ.151 மட்டுமே.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க இன்றே எல்.ஐ.சியின் பாலிஸியை எடுங்கள்.
மேலும் படிக்க | Aadhaar Card பெற தேவையான ஆவணங்கள் இல்லையா.. கவலை வேண்டாம்..!!!