Loan Moratorium அதாவது கடன் தடைக்கால பணப்பரிமாற்ற திட்டத்தின் பயன் யாருக்கு கிடைக்கும் யாருக்கு கிடைக்காது என்பது குறித்து இன்னும் பல கெள்விகள் உள்ளன. இப்போது நிதி அமைச்சகம் (Ministry of Finance) அதை தெளிவுபடுத்தியுள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி வரை, கடன் வாங்கியவர்களின் கூட்டு வட்டி மற்றும் தனி வட்டிக்கு இடையிலான வேறுபாட்டுத் தொகையின் கேஷ்பாக் கிடைக்கும். மேலும், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களும் இதன் மூலம் பயனடைவார்கள். கடந்த 6 மாதங்களில் கடன் தவணை செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்கள் என அனைவருக்கும் இது வழங்கப்படும்.
விவசாயம் மற்றும் டிராக்டர் கடன் பெற்றவர்களுக்கு எந்த பயனும் இல்லை
வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்ட விளக்கத்தில், நிதி அமைச்சகம், வட்டி தள்ளுபடி திட்டத்தில் விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளுக்கான கடன்களில் வட்டிக்கு வட்டி திட்டத்தால் எந்த பயனும் கிடைக்காது என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும், டிராக்டர் வாங்குவதற்கு கடன் பெற்றவர்களுக்கும் பலன் கிடைக்காது. ஆறு மாதங்கள் (2020 மார்ச் முதல் 31 ஆகஸ்ட் வரை) கடன் தடைக்காலத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி திட்டம் (கேஷ்பேக் திட்டம்) குறித்த வழிகாட்டுதல்களை அரசாங்கம் கடந்த வாரம் வெளியிட்டது.
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களும் நிவாரணம் பெறுகிறார்கள்
மொரொடோரியம் காலத்தில் கூட்டு வட்டி மற்றும் தனி வட்டி இடையிலான வேறுபாட்டுத் தொகை செலுத்தல் குறித்த அராசங்கத்தின் இந்த திட்டம் தொடர்பான கூடுதல் FAQ-களை வெளியிட்டு, நிதி அமைச்சகம், கிரெடிட் காடுகளில் பிப்ரவரி 29 வரை நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையின் அடிப்படையில் கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிவாரணத்திற்கான முக்கிய விகிதம் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ஈ.எம்.ஐ கடன்களுக்கு செலுத்தும் ஒப்பந்த விகிதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ALSO READ: Loan Moratorium News: Good News- இந்த தேதிக்குள் கணக்கில் தொகை செலுத்தப்படும்!!
8 பிரிவுகளுக்கு நன்மை கிடைக்கும்
இந்த திட்டத்தின் பயன் மொத்தம் 8 பிரிவுகளுக்கு வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியது. பயிர் மற்றும் டிராக்டர் கடன்கள் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் தொடர்பான கடன்களின் கீழ் வருகின்றன. அவை இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. முன்னதாக, ரிசர்வ் வங்கி (RBI) அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் இரண்டு கோடி ரூபாய் வரையிலான டர்ம் லோன்களுக்கான அறிவிக்கப்பட்ட வட்டிக்கு வட்டி தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், இரண்டு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கான வட்டி 2020 மார்ச் 1 முதல் 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்யப்படும்.
நிபந்தனைகள் என்னென்ன
பிப்ரவரி 29 வரை கடன் தவணை செலுத்தப்பட்டால்தான் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி கிடைக்கும், அதாவது தொடர்புடைய கணக்கு பிப்ரவரி வரை செயல்படாத சொத்தாக (NPA) இருந்திருக்கக் கூடாது. இதன் கீழ், அனைத்து வங்கிகளின் கடன்கள், வங்கி சாரா நிதி நிறுவனம், வீட்டுவசதி நிறுவனம் என அனைவரின் கடன்களும் ஏற்றுக்கொள்ளப்படும். இதற்காக சுமார் 6500 கோடியை அரசு செலவிடும்.
கேஷ்பேக் எவ்வளவு கிடைக்கும்
மார்ச் வரை வீட்டுக் கடனின் நிலுவைத் தொகை 30 லட்சம் ரூபாய் என்றும், வட்டி 7.5 சதவீதம் என்ற விகிதத்தில் வசூலிக்கப்படுவதாகவும் வைத்துக்கொள்வோம். இத்தகைய சூழ்நிலையில், மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கூட்டு வட்டி ரூ .114,272 ஆக இருந்திருக்கும். இந்த விகிதத்தில், தனி வட்டி ரூ .112,500. அதாவது இந்த கடனில் மொத்தம் ரூ .1772 கேஷ்பேக் கிடைக்கும்.
ALSO READ: Diwali gift: 2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR