LPG Gas Cylinder Price Today: ஒவ்வொரு ஆங்கில மாதம் 1ஆம் தேதி அன்றும் சந்தையில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். அதில் குறிப்பாக, எண்ணெய் நிறுவனங்கள் அதுசார்ந்த பொருள்களின் விலையை மாற்றியமைக்கும். அந்த வகையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர், வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர், விமான எரிபொருள் உள்ளிட்ட சிலவற்றின் விலைகளை ஒவ்வொரு ஆங்கில மாதம் 1ஆம் தேதி அன்றும் திருத்தும் செய்யப்படும்.
விலை திருத்தம் என்றால், அந்த பொருள்களின் விலை உயரும், குறையும் அல்லது அதே அளவில் நீடிக்கும். எனவே, ஆங்கில மாதம் 1ஆம் தேதியை மக்கள் திக் திக் என்ற பதைபதைப்புடன் எதிர்நோக்கியிருப்பார்கள். அந்த வகையில், இது வரை வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் குறைந்த அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இன்று பல மாதங்களுக்கு பிறகு வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை (LPG Gas Cylinder Price) 30 ரூபாய் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைப்பு மக்களவை தேர்தலை (Lok Sabha Election 2024) கருதில் கொண்டு செய்யப்பட்டுள்ளது என்று பலர் கூறி வருகிறனர். எனினும் நிதி ஆண்டின் தொடக்கத்தில் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது, மக்களை குஷி படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | கிரெடிட் கார்டு தொடர்பான விதிகளை மாற்றியுள்ள ஆர்பிஐ! புதிய விதிகள் அமல்!
அந்த வகையில் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ30 அதிரடியாகக் குறைந்துள்ளதால், தற்போது சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ1930க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ,1,765, மும்பையில் ரூ.1719, டெல்லியில் ரூ.1764.50, கொல்கத்தாவில் என ரூ.1879 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
Oil companies reduce price of 19 kg commercial and 5 kg FTL cylinders
Read @ANI Story https://t.co/SJ4Q0RXYfP#Oil #LPG #FTL pic.twitter.com/H1lCRVXmvt
— ANI Digital (@ani_digital) April 1, 2024
முன்னதாக கடந்த மாதம் நாடு முழுவதும் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ19 அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதனால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள் விலை உயரும் அச்சம் ஏற்பட்டது. மேலும் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் டெல்லியில் ரூ,1,795, மும்பையில் ரூ.1749, சென்னையில் ரூ.1,960 மற்றும் கொல்கத்தாவில் ரூ.1,911 என விற்பனை செய்யப்பட்டு வந்தது.
விமான எரிபொருளும் மலிவானது
இதனிடையே மையல் எரிவாயு சிலிண்டரை தொடர்ந்து தற்போது விமான எரிபொருளின் விலையையும் OMCகள் குறைக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருளின் விலையில் சுமார் ரூ.502.91/கிலோ குறைந்துள்ளது. அதே நேரத்தில், கடந்த மாதம் விலை லிட்டருக்கு ரூ.624.37 அதிகரித்தது. இந்த விமான எரிபொருளின் புதிய விலையும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபாஸ்டாக் விதிகளிலும் மாற்றம்:
NHAI இன் கூற்றுப்படி, ஏப்ரல் 1, 2024 முதல், KYC இல்லாத Fastags செல்லாது. அதன்படி KYC இல்லாத Fastagகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. எனவே உங்களிடம் Fastag KYC செய்யப்பாடாமல் இருந்தால், இனி சுங்கச்சாவடியைக் கடக்கும்போது நீங்கள் இரட்டிப்பு டோல் வரியைச் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | ‘இந்த’ தொழில்களை ஆரம்பிக்க பணம் தேவையில்லை! ஆனால் கத்தை கத்தையாக சம்பாதிக்கலாம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ