விவசாயிகளுக்கு நல்ல செய்தி: நாளை வருகிறது பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை

PM Kisan Samman Nidhi: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM Kisan) திட்டத்தின் 18வது தவணையை அக்டோபர் 5 ஆம் தேதி மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 4, 2024, 05:11 PM IST
  • வெப்காஸ்ட் மூலம் 2.5 கோடி விவசாயிகள் விழாவில் பங்கேற்பார்கள்
  • விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.3.45 லட்சம் கோடி பகிர்ந்தளிக்கப்படும்
  • கணக்கு இருப்பை செக் செய்வது எப்படி?
விவசாயிகளுக்கு நல்ல செய்தி: நாளை வருகிறது பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை title=

PM Kisan Samman Nidhi: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் 18 ஆவது தவணைக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு நல்ல செய்தி!! பிஎம் கிசான் நிதி தவணைக்கு காத்திருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளின் காத்திருப்பு நாளை முடிவுக்கு வருகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM Kisan) திட்டத்தின் 18வது தவணையை அக்டோபர் 5 ஆம் தேதி மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். 

PM Kisan திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 9.4 கோடி விவசாயிகளுக்கு நேரடி பயன் பரிமாற்றம் (டிபிடி) மூலம் ரூ.20,000 கோடி உதவி வழங்கப்படும் என்று வாஷிம் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ குறிப்பு தெரிவிக்கிறது. இது குறித்து இந்த பதிவில் காணலாம். 

வெப்காஸ்ட் மூலம் 2.5 கோடி விவசாயிகள் விழாவில் பங்கேற்பார்கள்

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வெப்காஸ்ட் மூலம் நாடு முழுவதும் இருந்து சுமார் 2.5 கோடி விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். 732 க்ரிஷி விக்யான் கேந்திராக்கள் (கேவிகேக்கள்), ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஐந்து லட்சம் பொது சேவை மையங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும். மகாராஷ்டிராவில் இதுவரை 1.20 கோடி விவசாயிகளுக்கு 17 தவணைகளில் ரூ.32,000 கோடி வழங்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

18வது தவணையாக, மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 91.51 லட்சம் விவசாயிகள் ரூ.1,900 கோடிக்கு மேல் பலன் பெறுவார்கள் என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

2,000 கோடி கூடுதலாக விடுவிக்கப்படும்

- நமோ ஷேத்காரி மஹாசம்மன் நிதி யோஜனா திட்டத்தின் ஐந்தாவது தவணையின் கீழ், மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.2,000 கோடியை பிரதமர் வெளியிடுவார். 
- நாளை நண்பகல் 12 மணியளவில், பிரதமர் மோடி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொடர்பான பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார், 
- இவற்றின் மதிப்பு சுமார் ரூ.23,300 கோடி.
- மாலை 4 மணியளவில் தானேயில் ரூ.32,800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 
- மாலை 6 மணிக்கு, பி.கே.சி மெட்ரோ நிலையத்திலிருந்து மும்பையின் ஆரே ஜே.வி.எல்.ஆர் முதல் பி.கே.சி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயிலை அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். 
- அதன் பின்னர் பிரதமர் மோடி, BKC மற்றும் சாண்டா குரூஸ் நிலையத்திற்கு இடையே மெட்ரோவில் சவாரி செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: GPF வட்டி விகித அறிவிப்பு வெளியானது... வட்டி அதிகமானதா?

விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.3.45 லட்சம் கோடி பகிர்ந்தளிக்கப்படும்

- பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 18வது தவணை வெளியிடப்பட்டால், 'பிஎம்-கிசான் சம்மான் நிதி'யின் கீழ் விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்ட மொத்தத் தொகை சுமார் 3.45 லட்சம் கோடி ரூபாயாக உயரும். 
- இந்த நிகழ்ச்சியின் போது, ​​பிரதமர் முதலமைச்சர் மாஜி லட்கி பஹின் யோஜனா திட்டத்தின் பயனாளிகளையும் கௌரவிப்பார்.
- பிராந்தியத்தில் நகர்ப்புற இயக்கத்தை அதிகரிக்கும் முயற்சியில் முக்கிய மெட்ரோ மற்றும் சாலை திட்டங்களை தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

PM Kisan: கணக்கு இருப்பை செக் செய்வது எப்படி?

உங்கள் வங்கிக் கணக்கில் PM Kisan தவணைப் பணம் வந்துள்ளதா இல்லையா என்பதை பல வழிகளில் பார்க்கலாம். 

- பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் தவணைப் பணம் உங்கள் கணக்கில் வரும்போது, ​​உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு செய்தி வரும். இந்தச் செய்தி உங்கள் வங்கி மற்றும் அரசாங்கத்திடமிருந்து வருகிறது. 
- இது தவிர, ஏடிஎம்மில் சென்று உங்கள் கணக்கைச் சரிபார்த்து, கணக்கில் பணம் வந்துவிட்டதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளலாம். 
- மினி ஸ்டேட்மெண்டில் கடந்த 10 பரிவர்த்தனைகளின் விவரங்களைப் பார்த்து, தொகை வரவு வைக்கப்பட்டதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 
- இது தவிர, அருகிலுள்ள கிளைக்குச் சென்றும் உங்கள் கணக்கை செக் செய்யலாம்.

மேலும் படிக்க | EPS ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் ஏகப்பட்ட நன்மைகள்: உயர்கிறதா குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News