PM Kisan Scheme: புதுடெல்லி: பிரதமர் கிசான் சம்மன் நிதியின் (PM Kisan Samman Nidhi) 8 வது தவணையின் 2000 ரூபாய் 9.5 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு மத்திய அரசால் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பணம் பெறாத விவசாயிகள் என்ன செய்வது? இங்கே முழு தீர்வு.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM Kisan Scheme) எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசிடமிருந்து நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. அதன்படி பிஎம் கிசான் (PM Kisan) திட்டத்தின் கீழ் 8ஆவது தவணைப் பணம் மே 14ஆம் தேதி முதல் வழங்கப்பட்டது. சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு அன்று நிதியுதவியை பிரதமர் மோடி வழங்கினார்.
ALSO READ | PM Kisan Yojana: இலவசமாக கிசான் கிரெடிட் கார்டை எவ்வாறு பெறுவது!
பணம் வந்துவிட்டதா? இல்லையா?
இத்திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கு பயனாளியின் பெயர் இணைக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்வதற்கு pmkisan.gov.in இணையதளத்தில் சென்று பார்க்கலாம். அதில் மெனு பாரில் உள்ள ’farmers corner’ என்ற வசதியை கிளிக் செய்து அதில் 'beneficiary list' என்பதில் உள்நுழைய வேண்டும். பிறகு உங்களது மாநிலம், மாவட்டம், பிரிவு, கிராமத்தின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும். பின்னர் 'Get information' என்பதை கிளிக் செய்து பார்த்தால் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் பெயர் விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் தகுதியுள்ளவர்களுக்குப் பணம் வந்துசேரவில்லை என்றால் அரசின் ஹெல்ப் லைன் எண்களுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். அதேபோல, மின்னஞ்சல் மூலமாகவும் புகார் செய்யலாம். PM Kisan Toll free Number: 18001155266 PM Kisan Helpline Number: 155261 PM Kisan Landline Number: 011-23381092, 23382401 PM Kisan Helpline:0120-6025109 Email முகவரி: pmkisan-ict@gov.in மூலமாகவும் புகார் செய்யலாம்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR