புதுடெல்லி: அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் பிற நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்வதில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதும், அத்தியாவசிய நறுமண எண்ணெய்களின் இறக்குமதியைக் குறைப்பதையும் நோக்கமாக கொண்டு இயங்கும் மத்திய அரசின் முக்கியமான திட்டம் ஊதா புரட்சி என்ற திட்டம் ஆகும். 'ஊதா புரட்சி'யின் கீழ் ஏற்றுமதி 600 மடங்கு அதிகரித்துள்ளது. அரோமா மிஷன் (Aroma Mission), 'ஊதா புரட்சி' (Purple Revolution) என்றும் அழைக்கப்படுகிறது.
மனம் கவரும் ஊதா நிறத்தில் உள்ள லாவண்டர் பூ தமிழில் சுகந்தி மலர் என்று அழைக்கப்படுகிறது. மிகுந்த மணமுடைய லாவண்டர் அனைத்து வகை வளமான மண்ணிலும் நன்கு வளரக் கூடியதாகும். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) இயக்குநர் ஜெனரல் என்.கலைசெல்வி இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அரசின் 'அரோமா மிஷன்' திட்டத்தால், விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
சிஎஸ்ஐஆரின் 82வது நிறுவன தின விழா ஏற்பாடுகள் குறித்து அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) இயக்குநர் ஜெனரல் என்.கலைசெல்வி தெரிவித்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் சிஎஸ்ஐஆர் செயல்பட்டு வருகிறது என்றும், அரோமா திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வருமானம் இரண்டு முதல் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.
மேலும் படிக்க | Dates Farming: தண்ணியே வேண்டாம்! மரம் வச்சா போதும், வருசத்துக்கு ரூ 20 லட்ச லாபம்
லெமன்கிராஸ் ஏற்றுமதி 600 மடங்கு அதிகரிப்பு
இந்த திட்டம் ஜம்மு காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டது. நறுமணப் பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்குவதே இதன் நோக்கம். அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் பிற நறுமணப் பொருட்களை உற்பத்தி செய்வதில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதும் அத்தியாவசிய நறுமண எண்ணெய்களின் இறக்குமதியைக் குறைப்பதும் இந்த பணியின் நோக்கமாகும்.
எலுமிச்சைப்புல் ஏற்றுமதி
'ஊதா புரட்சி'யின் கீழ் எலுமிச்சைப்புல் (Lemongrass ) ஏற்றுமதி 600 மடங்கு அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு விதைகள், செடிகள் வழங்குவது மட்டுமின்றி, விவசாயம் செய்யும் முறை குறித்தும் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
லெமன் க்ராஸ் தமிழில் “வாசனைப் புல்”, “எலுமிச்சைப் புல்” மற்றும் “இஞ்சிப் புல்” என பல பெயர்களில் அறியப்படுகிறது. காமாட்சிப் புல் என்றும் அறியப்படும் இந்த தாவரம் GRAMINAE என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் இருந்த 295 ரூபாய் காணவில்லையா... இது உங்களுக்கான எச்சரிக்கை!
விவசாயிகளுக்கு அரசு உதவி
'விவசாயிகள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினருக்கும், விவசாயத் திறன்களை CSIR கற்பிக்கிறது. விவசாயிகளை விஞ்ஞானிகள் தற்போது அணுகி வருகின்றனர். அவர்கள் வயல்கள் அல்லது பயிர்கள் அல்லது செடிகள் வளர்க்கப்படும் பகுதிகளுக்குச் சென்று, சாகுபடி தொடர்பான உதவிகளை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்ல, அறுவடை செய்த பிறகும், விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை விஞ்ஞானிகள் வழங்குகிறார்கள்.
ஊதா புரட்சி என்றால் என்ன?
ஊதா புரட்சி அதாவது அரோமா மிஷன், இதில் ஜம்மு காஷ்மீரில் லாவெண்டர் சாகுபடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லாவெண்டர் பூக்கள் ஊதா நிறத்தில் இருந்தன, அதனால்தான் இதற்கு ஊதா புரட்சி என்று பெயரிடப்பட்டது. முன்னதாக இது ஜம்மு காஷ்மீரின் சிறிய பகுதிகளில் வளர்க்கப்பட்டது.
ஜல் சக்தி அமைச்சகத்தில் காவலராகப் பணிபுரியும் பாரத் பூஷன், சிஎஸ்ஐஆர் வேண்டுகோளின் பேரில் நிலத்தின் ஒரு சிறிய பகுதியில் ஊதா நிறப் பூக்களை வளர்த்தார். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு நல்ல லாபம் கிடைத்தது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பூஷன், முதல் இரண்டு வருடங்களில் எனது வருமானம் இரட்டிப்பானது என்றும், தற்போது கடந்த பத்து வருடங்களில் சம்பாதித்ததை விட நான்கு மடங்கு அதிகமாக வருவாய் கிடைப்பதாகவும் தெரிவித்திருந்தார். பாரத் பூஷனின் வெற்றிக்குப் பிறகு, சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனாவில் விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கப்படுவது உண்மையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ