மத்திய அரசுக்கு சொந்தமான தபால் துறை மக்களின் வருமானத்திற்கு நல்ல ஆதாரத்தை தரும் வகையில் பல பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. அஞ்சல் அலுவலகங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் கவர்ச்சிகரமான வருமானத்துடன் பல்வேறு முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன. தபால் அலுவலகம் மூத்த குடிமக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தபால் அலுவலகம் பல்வேறு திட்டங்களை வழங்கி வரும் நிலையில், மூத்த குடிமக்களின் எதிர்கால நலனுக்காக தபால் அலுவலகம் பல திட்டங்களை வழங்கி வருகிறது. மூத்த குடிமக்களுக்காக அஞ்சல் அலுவலகம் வழங்கும் பிரபலமான திட்டங்களில் ஒன்று தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) ஆகும்.
மேலும் படிக்க | ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 1.80 லட்சம் வழங்கும் அரசு? உண்மை என்ன?
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) என்பது 5 ஆண்டு கால சேமிப்புத் திட்டமாகும், இதில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு ஆண்டுக்கு 8 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் உங்களின் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ.1,000 மற்றும் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சம் ஆகும். தபலா அலுவலகத்தின் இந்த மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) 60 வயதுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு காலாண்டிலும் சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் மதிப்பாய்வு செய்கிறது. 2022-23 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் (எஸ்சிஎஸ்எஸ்) வட்டி வருமானத்தை அரசாங்கம் ஆண்டுக்கு 8 சதவீதமாக உயர்த்தியது.
மார்ச் 31, 2023 வரை எஸ்சிஎஸ்எஸ் திட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய பணத்தின் உச்ச வரம்பு ரூ.15 லட்சம் ஆகும் மற்றும் 5 ஆண்டு கால முதிர்வுடன் வரும் வரும் இந்த திட்டத்தை நீங்கள் மேலும் 3 ஆண்டு காலங்களுக்கு நீட்டிப்பு செய்துகொள்ள முடியும். வரிச்சலுகை வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்பட்டு, முதிர்வு நேரத்தில் அசல் தொகையுடன் செலுத்தப்படும். ஒவ்வொரு காலாண்டின் கடைசி நாளில் அதாவது மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் வட்டி செலுத்தப்படுகிறது. மேலும் தபால் அலுவலகத்தின் எஸ்சிஎஸ்எஸ் திட்டத்தில் வரிச்சலுகை வழங்கப்படுகிறது, மூத்த குடிமக்கள் இந்திய வரிச் சட்டம், 1961 பிரிவு 80C-ன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை முதலீட்டாளர்கள் வருமான வரி விலக்கு பெறலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி, டிஏ அரியர் கிடைக்காது!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ