இரண்டு வருடங்களாக ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றுக்குப் பிறகு இப்போது நிலைமை மெதுவாக முன்னேறி வருகிறது. கார்ப்பரேட் துறையும் இப்போது தங்களது ஊழியர்களுக்கு இன்கிரிமென்ட் வழங்குவதில் மும்முரம் காட்டி வருகிறது. லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, இந்த ஆண்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு நல்ல இன்கிரிமென்டுகளை வழங்க முடியும்.
சம்பளம் 9% வரை அதிகரிக்கலாம்
இந்த ஆண்டு வணிகத்துறையை பொறுத்த வரையில் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. இதனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சராசரியாக 9 சதவீதம் வரை இன்கிரிமென்ட் கொடுக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவுவதற்கு முன் வழங்கப்பட்ட 7 சதவீத சராசரி இன்கிரிமென்டை விட 2 சதவீதம் அதிகம். ஸ்டார்ட்அப்கள், நியூ ஏஜ் கார்ப்பரேஷன்கள் மற்றும் யூனிகார்ன் நிறுவனங்களிலும், ஊழியர்கள் இந்த ஆண்டு பம்பர் சம்பள உயர்வைப் பெறலாம். சராசரியாக 12 சதவீதம் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் மற்றொரு சூப்பர் நியூஸ்
மைக்கேல் பேஜ் இந்தியா
சர்வதேச சிறப்பு ஆட்சேர்ப்பு குழு மைக்கேல் பேஜ் இந்தியா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் அறிக்கையின்படி, நிறுவனங்களில் அதிக செயல்திறன் கொண்ட ஊழியர்கள் இந்த ஆண்டு 20-25 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.
வங்கி மற்றும் நிதிச் சேவைத் துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் கட்டுமானத் துறையில் இந்த ஆண்டு நல்ல சம்பள உயர்வைப் பெறலாம். கணினி அறிவியல் துறையில் உயர் பொறுப்பில் பணிபுரியும் வல்லுநர்கள் இந்த ஆண்டு அதிக லாபம் ஈட்டப் போகிறார்கள். அந்தந்த நிறுவனங்களில் நல்ல சம்பள உயர்வைப் பெறலாம். இதற்குக் காரணம், இந்தியாவில் இ-காமர்ஸ் வணிகம் வேகமாக வளர்ந்து வருவதாலும், அனைத்துத் துறைகளும் தங்கள் வணிகத்தின் டிஜிட்டல் மாற்றத்தில் ஈடுபட்டு வருவதாலும் ஆகும்.
வணிகத்துறையில் போட்டி
மைக்கேல் பேஜ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அங்கித் அகர்வால் பேசும்போது, "ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் துறையின் மனநிலை இந்த முறை சாதகமாக உள்ளது. தொற்றுநோய் இப்போது குறைந்திருப்பது ஒரு பொதுவான விஷயமாக உள்ளது. இதனால் புதிதாக வேலைக்கு ஆட்களை பணியமர்த்துவதிலும் சந்தையில் சாதகமான போக்கு நிலவுகிறது. அனைத்து நிறுவனங்களும் சிறந்த திறமையாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு போட்டி போடுகின்றன. சந்தையில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள், வேலைக்கான திறமையில் இருக்கும் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நிறுவனங்களில் நல்ல பணியாளர்களை சேர்க்கும் ஆசை அதிகரித்து வருவதால் சம்பளம் அதிகமாக கிடைக்கிறது" என்றார்.
மேலும் படிக்க | SEBI: IPO இல் முதலீடு செய்கிறீர்களா, அப்போ இந்த செய்தி உங்களுக்குத் தான்
உள்நாட்டு உற்பத்தி
2021-22 நிதியாண்டில், இந்தியப் பொருளாதாரம் 8.3 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளதாக அங்கித் அகர்வால் கூறினார். அதே நேரத்தில், 2022-23 நிதியாண்டில், பொருளாதாரம் 8.7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் அதிகபட்ச வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. டேட்டா சயின்டிஸ்ட், கிளவுட் ஆர்க்கிடெக்ட்கள் அதிக தேவைப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR