EMI மூலம் வாகனங்களை எடுப்பதற்கு முன்னர் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை !

எந்த நிறுவனம் எவ்வளவு வட்டி விகிதத்தில் உங்களுக்கு இஎம்ஐ சலுகையை வழங்குகிறது என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமானதாகும்.

Written by - RK Spark | Last Updated : Jul 25, 2022, 07:23 AM IST
  • புதிய வாகனம் வாங்க போகிறீர்களா?
  • இஎம்ஐ சலுகை வழங்கும் நிறுவனங்கள்
  • தெரிந்துகொள்ள வேண்டிய வட்டிவிகிதக் கணக்கு
EMI மூலம் வாகனங்களை எடுப்பதற்கு முன்னர் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை ! title=

வீட்டு உபயோக பொருட்கள், வாகனங்கள் போன்ற அனைத்து பொருட்களும் இப்போது இன்ஸ்டால்மெண்ட் வாயிலாக நாம் பெற்றுக்கொள்ள முடியும்.  ஒரே நேரத்தில் மொத்த பணத்தையும் கொடுத்து வாங்குவதற்கு பதிலாக, இஎம்ஐ மூலமாக பணம் செலுத்துவது மக்களுக்கு சிரமமில்லாத ஒன்றாக தெரிகிறது.  பெரும்பாலான மக்கள் பைக், கார் போன்ற விலையுயர்ந்த வாகனங்களை அதிகமாக இஎம்ஐ மூலம் தான் வாங்கிக்கொள்கிறார்கள்.  சிலர் வாங்க விரும்பும் பைக் விலையுயர்ந்ததாக இருக்கும், ஆனால் ஒரே தவணையில் பணத்தை செலுத்தி வாங்கும் அளவிற்கு போதுமான கையிருப்பு அவர்களிடம் இல்லாமல் போகக்கூடும், அதுபோன்ற சமயங்களில் மக்கள் இஎம்ஐ வழியை தேர்ந்தெடுக்கின்றனர்.  இஎம்ஐ மூலம் வாகனங்களை வாங்குவது எளிதான ஒன்றாக இருந்தாலும், அந்த செயல்முறையை தேர்ந்தெடுக்கும் முன்னர் நாம் சில விஷயங்களை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | இரு சக்கர வாகன கடன்களை பெற சில ஸ்மார்ட் டிப்ஸ்!

நீங்கள் ஷோரூமுக்கு ஒரு பைக் வாங்க செல்கிறீர்கள், உங்கள் கையில் நீங்கள் விரும்பும் பைக்கிற்கான தொகை இருக்கும்பட்சத்தில் நீங்கள் அதனை முழுமையாக செலுத்தி பைக்கை பெற்றுக்கொள்ளலாம்.  ஆனால் உங்களிடம் போதுமான பணம் இல்லாவிடில் நீங்கள் கடன் பெற்றுக்கொள்ளலாம், இதற்கென அந்த ஷோரூம் நிர்வாகிகளே சில தனியார் கடன் வழங்கும் நிறுவங்களை உங்களுக்கு பரிந்துரைப்பார்கள். 

நீங்கள் விரும்பினால் அவற்றை தேர்ந்தெடுக்கலாம் அல்லது அரசு சார்ந்த வங்கிகளிலும் நீங்கள் வாகன கடன் பெற்றுக்கொள்ளலாம்.  அப்போது நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது எந்த நிறுவனம் எவ்வளவு வட்டி விகிதத்தில் உங்களுக்கு இஎம்ஐ சலுகையை வழங்குகிறது என்பதை நீங்கள் அலசி ஆராய்ந்த பின்னரே அதனை தேர்வு செய்யவேண்டும்.

மேலும் படிக்க | மீண்டும் வரும் Yamaha RX 100 விலை? பணத்தை ரெடி பண்ணுங்கோ

சில நிறுவனங்கள் 5ம் தேதிக்குள் தவணை தொகையை செலுத்த வேண்டும் அல்லது 7ம் தேதிக்குள் என ஒவ்வொரு கால வரம்பை வைத்திருக்கும்.  அந்த தேதிக்குள் நாம் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டால் நமக்கு அபராதம் வீதிக்கப்படும், அதனால் உங்களால் தவறாமல் பணம் செலுத்திவிட முடியுமா என்பதை கருத்திற்கொண்டு தான் நீங்கள் கடன் பெற வேண்டும்.  கடன் பெற ஒப்புதல் தெரிவித்து நீங்கள் கையொப்பமிடும்போது டாக்குமென்டுகளை தெளிவாக படித்து பார்க்க வேண்டும். 

மேலும் தவணை காலத்திற்கு முன்னதாக நீங்கள் முழு பணத்தையும் கட்ட விரும்பினால், அதற்கும் சில விதிமுறைகள் உண்டு.  ஒவ்வொரு நிறுவனமும் இவ்வவளவு காலத்திற்கு இந்த நபர் இஎம்ஐ செலுத்த வேண்டும் என்று விதித்திருக்கும், அந்த காலத்திற்கு நீங்கள் இஎம்ஐ செலுத்திய பிறகே முழு பணத்தையும் செலுத்தி கடனை முழுமையாக அடைக்க முடியும்.  அதற்கு வட்டி செலுத்த வேண்டியதில்லை, ஆனால் குறிப்பிட்ட தொகை வசூல் செய்யப்படும், அதனால் இஎம்ஐ பெறுவதற்கு முன்னர் அந்த நிறுவனத்தில் ப்ரீக்ளோஸர் கட்டண சதவீதம் எவ்வளவு என்பதையும் நீங்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

மேலும் படிக்க | மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா எஸ்யூவி ஜூலை 20ம் தேதி அறிமுகம்: விலை ரூ 15 லட்சம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News