கோடையில் எப்போதுமே மின்சார கட்டணம் அதிகம் வரும், வீட்டில் பேன்கள் மற்றும் ஏசி அதிக அளவில் பயன்படுத்துவதால், மின்சாரம் அதிகம் செலவாகிறது. எனவே மின்சாரத்தை சேமிப்பது முக்கியம். இல்லையெனில் பில் ஷாக் அடிக்க தொடங்குகிறது. இதற்காக, உங்கள் பழக்கத்தை சிறிய அளவில் மாற்றுவதன் மூலம் நீங்கள் நிறைய சேமிக்க முடியும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் செலவும் ஓரளவிற்கு குறையும்.
ஏர் கண்டிஷனர் சர்வீஸிங்
கோடையில், நீங்கள் தினமும் ஏ.சி.யைப் (AC) பயன்படுத்தத் தொடங்கும் போது, மின்சாரம் நிறைய செலவாகத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முதலில் ஏ.சி. சர்வீஸ் செய்து பெறுவதும் அதன் வெப்பநிலையை செட் செய்வது முக்கியம். டெப்பரேச்சர் தட்பநிலையை, 18 டிகிரி, 20 டிகிரி என வைக்காமல், 22 என வைப்பதன் மூலம், மின்சார கட்டணத்தை 30 சதவிகிதம் குறைக்க முடியும். மேலும் பழுதில்லாமல் சுத்தமாக, முறையாக சர்வீஸ் செய்து பராமரித்தால், மின்சாரத்தை மேலும் சேமிக்க முடியும்.
வாஷிங் மெஷினை பயன்படுத்தும் முறை
நீங்கள் தினமும் வாஷிங் மெஷினை பயன்படுத்தினால், மின்சாரம் நிறைய செலவாகும் என்பது உறுதி. அத்தகைய சூழ்நிலையில், தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். தினமும் துணிகளைக் துவைப்பதற்கு பதிலாக, வாஷின் மெஷினின் அளவிற்கு ஏற்ப, துணைகள் சேர்ந்த பிறகு அவற்றை துவைக்கலாம். இதைச் செய்வதன் மூலம், மின்சாரம் குறைவாக செலவாகும், எனவே தேவைக்கு ஏற்ப ஒரு நாள் விட்டு ஒரு நாள், இரண்டு அல்லது மூன்று நாட்களில் வாஷிங் மெஷினில் துணி துவைக்க வேண்டும்.
வெளிச்சம் மற்றும் காற்றோட்டம்
வீட்டில் வெளிச்சம் நன்றாக இருந்தால், அதிக மின்சாரம் செலவாகாது. இல்லையென்றால் பகலில் கூட லைட்டை போட்டு வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். போதுமான அளவு இயற்கை ஒளி இருந்தால் வீட்டிற்கும் நல்லது. காற்றோட்டம் நன்றாக கோடையில் வீடு, கொதிக்காமல் சிறிது குளிர்ச்சியாக இருக்கும், எனவே போதுமான காற்று இருக்கும்போது, நீங்கள் விசிறி / ஏசியை போன்றவற்றை குறைந்த அளவில் இயக்கினால் போதும். ஆகையால், வீட்டில் காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது முக்கியம்.
சூரிய சக்தியைப் பயன்படுத்துங்கள்
சூரிய சக்தியைப், அதாவது சோலார் பவரை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் மின்சார கட்டணத்தை எளிதாகக் குறைக்கலாம். சூரிய சக்தி அமைப்புகளை நிறுவ ஆரம்பத்தில் உங்களுக்கு நிறைய செலவாகும் என்றாலும், பின்னர் அதனால் மின்சார கட்டணம் பெருமளவில் குறையும்.
ALSO READ | இனி சந்தையில் இந்த ஸ்மார்ட் போன் கிடைக்காது; காரணம் என்ன தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR