Income Tax Notice: வாடகை வீடுகளில் வசிக்கும் பலர் ரொக்கமாக மாத வாடகை அளிப்பதை பல முறை பார்த்துளோம். சில சமயங்களில் வீட்டு உரிமையாளர்களே வாடகையை ரொக்கமாக செலுத்த சொல்கிறார்கள். வீட்டு வாடகையை ரொக்கமாக செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், சில நேரங்களில் இதன் காரணமாக வருமான வரித்துறையின் நோட்டீஸ் வரக்கூடும். ஆம்!! இதை கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இது உண்மை. அப்படி வருமான வரி நோட்டீஸ் வந்தால், அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
ஆன்லைனில் அல்லது காசோலை மூலம் வாடகை செலுத்துங்கள்
நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் வீட்டு வாடகையை ஆன்லைனில் அல்லது காசோலை மூலம் செலுத்துவது நல்லது. நீங்கள் வாடகையாக செலுத்திய தொகைக்கு இது சான்றாக இருக்கும். நீங்கள் இதைச் செய்யாமல், பணமாகச் செலுத்தினால், உங்கள் வருமானம் மற்றும் செலவுகள் கணக்கில் பொருந்தாமல். உங்களுக்கு வருமான வரித் துறையின் நோட்டீஸ் வரலாம். இந்நிலையில், நீங்கள் வாடகை செலுத்தியதை நிரூபிக்கும் சில முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையிடம் காட்ட வேண்டும். உங்களுக்கு இந்த 4 ஆவணங்கள் தேவைப்படலாம்.
1: செல்லுபடியாகும் வீட்டு வாடகை ஒப்பந்தம் (House Rent Agreement)
நீங்கள் வாடகை வீட்டில் வசிக்கும் நபராக இருந்தால், சரியான வாடகை ஒப்பந்தம் உங்களிடம் இருப்பது அவசியம். அதாவது உங்கள் வீட்டு உரிமையாளருடன் நீங்கள் வாடகை ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். கூடுதலாக, வாடகை ஒப்பந்தம் வருமான வரி விதிகளின்படி இருக்க வேண்டும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக, உங்கள் மாத வாடகை ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருந்தால், அதிலிருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட வேண்டும். டிடிஎஸ் (TDS) கழிக்கப்படுமா இல்லையா, எப்படி கழிக்கப்படும் என்பதை வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். இது தவிர, வாடகை ஒப்பந்தத்தில் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருப்பவர் என இருவரின் அனைத்து அடிப்படை விவரங்களும் இருக்க வேண்டும். இது தவிர, இருவரிடமும் பான் விவரங்கள் இருக்க வேண்டும்.
2: வாடகை ரசீது (Rent Receipt)
வீட்டு வாடகை கொடுப்பனவை (House Rent Allowance) க்ளெய்ம் செய்ய, உங்களிடம் சரியான வாடகை ஒப்பந்தம் மற்றும் வாடகை ரசீது இருக்க வேண்டும். அதாவது, உங்கள் வீட்டு உரிமையாளருக்கு வாடகை செலுத்தியதற்கான ரசீதையும் நீங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் உண்மையில் வீட்டு வாடகையை வீட்டு உரிமையாளருக்கு செலுத்தியுள்ளீர்கள் என்பதை இந்த வாடகை ரசீது நிரூபிக்கிறது. எச்ஆர்ஏ (HRA) க்ளைம் செய்யும் போது, வாடகை ஒப்பந்தத்துடன் வாடகை ரசீதையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்: இனி வீட்டிலிருந்தே இதை செய்யலாம்
3: ஆன்லைனில் வாடகை செலுத்தியதற்கான அறிக்கை (Online Rent Payment Statement)
வாடகை செலுத்தும் முறையைப் பற்றி உங்களிடம் கேட்கப்படாது என்றாலும், சில குழப்பங்களால், வருமான வரித் துறையிலிருந்து உங்களுக்கு நோட்டீஸ் வந்தால், உங்களுக்கு வங்கி அறிக்கை (Bank Statement) தேவைப்படலாம். நீங்கள் ரொக்கமாக வாடகை செலுத்தினால் இந்தச் சான்றை வழங்க முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில், பல CA மற்றும் வரி வல்லுநர்கள் UPI, Net Banking அல்லது Credit Card போன்றவை மூலம் வாடகையை எப்போதும் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். இதன் மூலம் நீங்கள் வாடகை செலுத்தியதற்கான உறுதியான ஆதாரம் உங்களிடம் இருக்கும். இந்த ஆதாரங்களை யாரும் மறுக்க முடியாது.
4: வீட்டு உரிமையாளரின் பான் எண் கண்டிப்பாக தேவை (PAN of House Owner)
ITR தாக்கல் செய்யும் போது அல்லது நிறுவனத்தில் HRA க்ளைம் செய்யும் போது வாடகை வீட்டில் இருப்பவருக்கு வீட்டு உரிமையாளரின் PAN தேவைப்படும். இதன் மூலம் நீங்கள் செலுத்திய வாடகையை உண்மையில் யார் பெற்றார்கள் என்பது வருமான வரித்துறைக்கு தெரிய வருகிறது. நீங்கள் வாடகையை பணமாக செலுத்தினாலும், வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை வழங்குவது அவசியம். இல்லையெனில் உங்களுக்கு குறைவான வரிச் சலுகை கிடைக்கும்.
உங்களின் மொத்த வாடகை ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், வீட்டு உரிமையாளரின் பான் எண்ணை வழங்குவது அவசியம். இல்லையெனில் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கு உங்களால் HRA க்ளெய்ம் செய்ய முடியாது. இந்த பான் (PAN) சரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சமீபத்திய நாட்களில் தவறான பான் எண்ணை உள்ளிட்ட பலருக்கு வருமான வரித்துறை (Income Tax Department) நோட்டீஸ் (Income Tax Notice) அனுப்பியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ