இந்தியாவில் இலவச ரேஷன் திட்டம் ஏழை மக்கள் உணவு பெற உருவாக்கப்பட்டது. அரசாங்கம் ஏழைகளுக்கு இலவச உணவை வழங்குகிறது, ஆனால் இதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. இந்த உணவு உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு சென்று செருகிறதா? அல்லது மாறாக வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்த உணவு பொருட்கள் வீணாவதால் இந்தியாவிற்கு சுமார் 69,000 கோடி ரூபாய் இழக்க நேரிடலாம் என்று சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ICRIER) குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ICRIER அறிக்கையின்படி நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 69,000 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள் காணாமல் போவதாக அறிக்கை கூறுகிறது. அரசை நம்பி இருக்கும் 81 கோடி ஏழைகளுக்கு இந்த உணவு பொருட்கள் சென்று சேர வேண்டும். ஆனால் ஏழைகளுக்கு கொடுக்க பட வேண்டிய சுமார் 2 கோடி டன் அரிசி மற்றும் கோதுமை கள்ள சந்தையில் விற்கப்படுகிறது. இதனால் உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு இவை சென்று சேருவதில்லை என்று கூறப்படுகிறது.
ரேஷன் பொருட்கள் திருட்டு
முன்பு இருந்ததை விட தற்போது ரேஷன் பொருட்கள் திருட்டு குறைந்து இருந்தாலும், இன்னும் முழுமையாக ஒளிக்கப்படவில்லை என்று சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் ICRIER தெரிவித்துள்ளது. 2011-12ல், கிட்டத்தட்ட பாதி உணவு திருடப்பட்டது, ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 28% ஆகக் குறைந்துள்ளது. இது இன்னும் கவலைப்பட வேண்டிய ஒன்று, ஏனெனில் இது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் இன்னும் டிஜிட்டல் முறை அமல்படுத்தப்படாதது திருட்டிற்கான முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, குஜராத் ஆகிய இடங்களில் அதிக முறைகேடுகள் நடைபெறுகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத இடங்களில் குற்றங்கள் அதிகம் நடக்கிறது.
முன்பு அதிகம் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற பீகார், மேற்கு வங்கம் போன்ற சில இடங்களில் இதை சரி செய்ய கடுமையாக உழைத்து வருகின்றனர். பீகாரில், திருடப்பட்ட ரேஷன் (உணவுப் பொருட்கள்) அளவு 68.7%லிருந்து 19.2% ஆகக் குறைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் 9% மட்டுமே குறைந்துள்ளது. ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைப்பதன் மூலமும், விற்பனையைக் கண்காணிக்க சிறப்பு இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் அவர்கள் முன்னேறி வருகின்றனர்.
இதை சரி செய்ய என்ன செய்யலாம்?
உணவை இலவச வழங்குவதற்கு பதிலாக மக்களுக்கு பணம், சிறப்பு அட்டைகள் அல்லது உணவு வாங்க கூப்பன்கள் வழங்கினால் இந்த பிரச்சனைகள் மற்றும் தவறுகளை நிறுத்த உதவும் என்று நிபுணர்கள் நினைக்கிறார்கள். பணம் தேவைப்படுபவர்களுக்கு நேரடியாகச் சென்றால், அது உண்மையில் அவர்களுக்கு உதவும். உணவு வழங்கும் ஒவ்வொரு இடத்திலும் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்க ஒரு வழி இருக்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷயங்களைச் சிறப்பாகச் செய்ய சில முயற்சிகள் உள்ளன, ஆனால் இன்னும் நிறைய வேலைகள் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது. ஏழைகள் அனைவருக்கும் ரேஷன் உணவு சரியான முறையில் சென்று சேருவதை உறுதி செய்ய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ