தமிழகத்தின் காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
முன்னதாக, கடந்த வெள்ளியன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடா் கழகம் என மொத்தம் 9 கட்சிகள் கலந்துக்கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்..!
காவிரி உரிமைப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியிலிருந்து சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி “காவிரி உரிமை மீட்பு பயணம்” தோழமைக் கட்சித் தலைவர்களோடு தொடங்க விருக்கிறேன். அதேபோல வரும் 9-ம் தேதி (திங்கள் கிழமை) அன்று அரியலூா் மாவட்டத்தில் இருந்து கடலூா் நோக்கி நடைபெற உள்ளது.
இரண்டு கட்டமாக நடைபெறும் “காவிரி உரிமை மீட்பு பயணம்” முதல் கட்டமாக திருச்சி முக்கொம்புவில் இருந்து கடலூா் வரையிலான பயணம் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும். இரண்டாவது கட்டமாக அரியலூா் மாவட்டத்தில் இருந்து கடலூா் நோக்கி ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறும் என்றார்.
இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திருச்சி முக்கொம்புவில் இருந்து கடலூா் வரை நேற்று காவிரி உரிமை மீட்பு பயணத்தை துவங்கினார்.
இதை தொடர்ந்து, இரண்டாவது நாளான இன்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை துவங்கினார்.