சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனின் பைனல்ஸில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அபாரமாக வென்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன் 47 ரன்களும், யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 178 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டூபிளசிஸ் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மற்றொரு துவக்க வீரரான சேன் வாட்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்களுடன் 117 ரன்கள் எடுத்து கைகொடுத்தன் மூலம் 18.3 ஓவரிலேயே இலக்கை அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையையும் வென்றது.
#WhistlePodu! We are the #IPL2018 Champions!! This win is for you fans.. You have also stuck by me after I got injured & have motivated me to get fit soon.Thank you for your love & support! It all began at Wankhede & it’s a great feeling to lift the Trophy here. #CSK @ChennaiIPL pic.twitter.com/aDGsbRViox
— IamKedar (@JadhavKedar) May 27, 2018
இதுவரை தான் பங்கேற்ற 9 சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள சிஎஸ்கே, 7 வது முறையாக பைனல்ஸ் நுழைந்தது. இதுவரை 2010 மற்றும் 2011 ல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக சாம்பியனாகி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இதுவரை மூன்று முறை சாம்பியனாகியுள்ளது!