அரசுப் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் ஜூன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் துவங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது!

Last Updated : Jun 3, 2018, 06:05 PM IST
அரசுப் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு! title=

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் ஜூன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் துவங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது!

பணியிட மாற்றம் கோறும் பள்ளி ஆசிரியருகளுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் நடைப்பெற்று வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டிற்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் ஜூன் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் துவங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேப்போல் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலகத்தில் விண்ணங்களைப் பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரப்பிய விண்ணப்பங்களை வரும் ஜூன் 7-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 11-ஆம் நாள் துவங்கும் எனவும், மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 12-ஆம் நாள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வானது வரும் ஜூன் 21 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது!

Trending News