புதுடெல்லி: காற்று மாசுபாடு காரணமாக இந்தியா மற்றும் சீனாவில் கடந்த 2015-ம் ஆண்டு 1.6 மில்லியன் பேர் மரணமடைந்துள்ளனர்.
தற்போது உலக அளவில் காற்று மாசுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவும், சீனாவும் காற்று மாசு அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குளிர்காலங்களில் காற்று மாசுபாடு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.
படிம எரிபொருள்களால் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக இந்தியா மற்றும் சீனாவில் கடந்த 2015-ம் ஆண்டு 1.6 மில்லியன் பேர் மரணமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக கிரீன்பீஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், படிம எரிபொருட்கள் மற்றும் நிலக்கரி இவைகளை தொடர்ச்சியாக பயன்படுத்தியதன் காரணமாக இந்தியா மற்றும் சீனாவில் மாசுபாடு வெகுவாக அதிகரித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள 10 நாடுகளில் காற்று மாசுபாடுகளினால் மரணம் அதிகமாக நிகழ்ந்துள்ளது. 2015-ம் ஆண்டில் ஒவ்வொரு 1 லட்சம் பேருக்கும் இந்தியா மற்றும் சீனாவில் முறையே 138 மற்றும் 115 பேர் இறந்துள்ளனர்.